கோவையில் 350 பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

published 1 year ago

கோவையில் 350 பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

கோவை : கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த 350 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி கோவை தடாகம் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கினார்.

தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜமுருகன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கோவை 'பிசி பீ இண்டர்நேசனல் பள்ளி' தாளாளர் கல்பனா முரளிதரன் உள்ளிட்ட பள்ளி தாளாளர்கள் கலந்து கொண்டு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் அங்கீகார ஆணையை பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு பேசியதாவது:

தமிழக தனியார் பள்ளிகள் இயக்கத்தின் கீழ் 12,631 மெட்ரிக் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

 இந்த வகையான தனியார் பள்ளிகள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பள்ளியின் அங்கீகாரத்தினை புதுப்பித்து ஆணை பெற வேண்டும். மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் தனியார் பள்ளிகள் பயன்பெறும் வகையில் மண்டல வாரியாக அங்கீகார சான்றுகளை புதுப்பித்து ஆணை வழங்கப்படுகிறது.

இதன்படி முதற்கட்டமாக திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10 மாவட்டங்களை சேர்ந்த தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை வழங்கப்பட்டது. குழந்தைகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் தெளிவாக வாசிக்க வேண்டும் என்பதற்காக ரீட் மாரத்தான் செயலி கொண்டு வரப்பட்டது. 

தனியார் பள்ளிகளில் நமது தாய்மொழியான தமிழ் மொழியை கற்றுத்தர சிறப்பு ஆசிரியர்களை நியமித்து மாணவர்களுக்கு கற்று கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe