மருத்துவ காப்பீட்டு பலன்களைப் பெற முடியாமல் தவிக்கும் புற்றுநோயாளிகளுக்கு உதவும் வகையில் புதிய திட்டம் துவக்கம்.

published 1 year ago

மருத்துவ காப்பீட்டு பலன்களைப் பெற முடியாமல் தவிக்கும் புற்றுநோயாளிகளுக்கு உதவும் வகையில் புதிய திட்டம்  துவக்கம்.

ஆவாரம்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில்,  மருத்துவ காப்பீட்டு பலன்களைப் பெற முடியாமல் தவிக்கும் புற்றுநோயாளிகளுக்கு உதவும் வகையில் புதிய திட்டம்  துவக்கம்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 80க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில், கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி, ரோட்டரி சங்கம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில், மிராக்கிள் எனும் புதிய திட்டத்தை இன்று துவங்கியது, இதற்கான துவக்க விழா, நிகழ்ச்சி, இன்று கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நடைபெற்றது. 

இதில் ராமகிருஷ்ணா புற்றுநோய்  ஆராய்ச்சி மையத்தின் இயக்குனரும்,  மருத்துவருமான, குகன், கோயம்புத்தூர் ரோட்டரி க்ளப் ஆப் ஸ்மார்ட் சிட்டி தலைவர் அபர்னா சுங்கு, எஸ்என்ஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி, சுபாஷ் என பலரும் கலந்து கொண்டு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 68 லட்சரூபாய்கான காசோலையை வழங்கினனர், இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் குகன் கூறும் பொழுது “புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வரும் நோயாளிகள், அவர்களது ஆதார் அட்டை, அடையாள அட்டைகள், இல்லாமல் காப்பீட்டு திட்ட பலன்களை  பெற முடியாமல், தவித்து வரும் நிலை உள்ளது, அவ்வாறு தவிக்கும் ஏழை எளிய புற்று நோயாளிகளுக்கு, இந்த திட்டத்தின் மூலமாக கிடைக்குத் இந்த நிதியை வைத்து அவர்களுக்கான சிகிச்சை அளிக்க இருக்கிறோம்.” என்றார்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe