12 ராசிகளுக்குமான இன்றைய (27ம் தேதி ) ராசிபலன்
மேஷம்
கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். தாய்மாமன் வழியில் அனுகூலம் ஏற்படும். தூரத்து உறவினர்களின் வருகை உண்டாகும். வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை உருவாக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அஸ்வினி : அனுகூலமான நாள்.
பரணி : மேன்மை ஏற்படும்.
கிருத்திகை : மாற்றமான நாள்.
---------------------------------------
ரிஷபம்
நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். பணிபுரியும் இடத்தில் புதுவிதமான சூழல் ஏற்படும். திட்டமிட்ட சில காரியங்கள் நிறைவேறும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். கலை சார்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
கிருத்திகை : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
ரோகிணி : புதுவிதமான நாள்.
மிருகசீரிஷம் : இலக்குகள் பிறக்கும்.
---------------------------------------
மிதுனம்
கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சமூகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். உறவுகளின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். சக ஊழியர்களால் பொறுப்புகள் குறையும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.
திருவாதிரை : எண்ணங்கள் மேம்படும்.
புனர்பூசம் : மேன்மை ஏற்படும்.
---------------------------------------
கடகம்
நவீன தொழில்நுட்ப கருவிகளை வாங்குவீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் துணையாக இருப்பார்கள். மாமனார் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். இடமாற்ற முயற்சிகள் கைகூடும். குறுகிய தூர பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். பாகப்பிரிவினைகளில் இருந்துவந்த தாமதம் குறையும். மறதிகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
புனர்பூசம் : கவலைகள் குறையும்.
பூசம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
ஆயில்யம் : தாமதம் குறையும்.
---------------------------------------
சிம்மம்
குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். அடமான பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மனதளவில் புதிய தெளிவு பிறக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நிர்வாகம் சார்ந்த துறைகளில் புதுவிதமான சூழல் அமையும். பயணங்களால் அனுபவம் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : அறிமுகம் கிடைக்கும்.
பூரம் : வாய்ப்புகள் உண்டாகும்.
உத்திரம் : அனுபவம் ஏற்படும்.
---------------------------------------
கன்னி
எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்கவும். உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நினைவாற்றலில் இருந்துவந்த மந்தத்தன்மைகள் விலகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். காப்பீடு தொடர்பான செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். உற்சாகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திரம் : பொறுமை வேண்டும்.
அஸ்தம் : சிந்தித்துச் செயல்படவும்.
சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.
---------------------------------------
துலாம்
புதுமையான விஷயங்களின் மீது ஆர்வம் உண்டாகும். இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். அறிமுகம் இல்லாத புதிய நபர்களால் மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும். அநாவசிய செலவுகளை தவிர்க்க முயல்வீர்கள். எண்ணியது ஒன்றாகவும், நடப்பது வேராகவும் அமையும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : ஆர்வம் உண்டாகும்.
சுவாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
விசாகம் : புதுமையான நாள்.
---------------------------------------
விருச்சிகம்
பழைய பிரச்சனைகள் குறையும். பொதுக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். செலவுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : பிரச்சனைகள் குறையும்.
அனுஷம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
கேட்டை : இன்னல்கள் குறையும்.
---------------------------------------
தனுசு
வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். உறவினர்களின் வழியில் சுபிட்சம் உண்டாகும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். அரசு பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். சொந்த ஊர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். மருத்துவத்துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்ப்புகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மூலம் : அனுபவம் ஏற்படும்.
பூராடம் : மேன்மை உண்டாகும்.
உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
மகரம்
உறவினர்களை பற்றிய புரிதல் ஏற்படும். தெய்வீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். புதிய நபர்களால் மாற்றமான சூழல் அமையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எதிலும் அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். ஆடம்பர செலவுகளை படிப்படியாக குறைக்கவும். தந்தை வழி சொத்துக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : புரிதல் ஏற்படும்.
திருவோணம் : சிந்தனைகள் மேம்படும்.
அவிட்டம் : ஆதாயமான நாள்.
---------------------------------------
கும்பம்
திட்டமிட்ட காரியங்களில் அலைச்சல்கள் மேம்படும். வியாபார பணிகளில் போட்டிகள் உண்டாகும். மற்றவர்களின் செயல்களில் தலையிடுவதை தவிர்க்கவும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். விளையாட்டு விஷயத்தில் கவனத்துடன் இருக்கவும். அலுவலகப் பணிகளில் மறைமுக விமர்சனங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : அலைச்சல்கள் மேம்படும்.
சதயம் : அனுசரித்துச் செல்லவும்.
பூரட்டாதி : விழிப்புணர்வு வேண்டும்.
---------------------------------------
மீனம்
சகோதரர் வகையில் ஆதரவு ஏற்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் வெற்றியடையும். வர்த்தகப் பணிகளில் லாபம் உண்டாகும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
பூரட்டாதி : ஆதரவு ஏற்படும்.
உத்திரட்டாதி : பொருட்சேர்க்கை உண்டாகும்.
ரேவதி : லாபகரமான நாள்.
---------------------------------------