ஊட்டி சிறப்பு மலை இரயில் ஜூலை வரை நீடிப்பு..!

published 1 year ago

ஊட்டி சிறப்பு மலை இரயில் ஜூலை வரை நீடிப்பு..!

கோவை: மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஊட்டிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கோடை சீசனை முன்னிட்டு, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஊட்டிக்கு சிறப்பு ரயிலை இயக்கி வருகிறது.

 

மேட்டுப்பாளையத்தில் இருந்து, சனிக்கிழமை காலை, 9:10 மணிக்கு, இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. குன்னூருக்கு, 12:55 மணிக்கும், ஊட்டிக்கு மதியம், 2:25 மணிக்கும் சென்றடைகிறது.அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை ஊட்டியிலிருந்து மதியம் புறப்பட்டு, மேட்டுப்பாளையத்திற்கு மாலை வந்தடைகிறது. 

சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம், சிறப்பு ரயிலை, ஜூன் மாதம் வரை இயக்க அறிவித்திருந்தது.

இந்நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை, அதிகம் உள்ளதை அடுத்து, ஜூலை 30ம் தேதி வரை, சிறப்பு ரயிலை ஒரு மாதத்திற்கு நீட்டிப்புசெய்துள்ளது.

 

இத்தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe