தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கையால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்பு விவசாயிகள் சங்க பொது செயலாளர் பேட்டி

published 1 year ago

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கையால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்பு விவசாயிகள் சங்க பொது செயலாளர் பேட்டி

கோவை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கையால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் சங்க பொது செயலாளர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை தீர்க்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் 

பாதிக்கப்பட்டவர்கள் மனு அளிக்க கோரிக்கை பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை விவசாயிகள் சங்கத்தினர் (சாதி, மதம் கட்சி சார்பற்றது) விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் மணி, மாநில பொது செயலாளர் கந்தசாமி தலைமையில் சிவானந்தா காலனியில் இருந்து 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக வந்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் உள்ள கோரிக்கை பெட்டியில் மனு அளித்தனர்.

 அப்போது விவசாயிகள் சங்க (சாதி, மதம், கட்சி சார்பற்றது) மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி கூறுகையில், '' தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடந்த 1980ம் ஆண்டு வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு வீட்டை கட்டி தர வேண்டும் என்ற நல்ல நோக்கில் விவசாயிகளிடமிருந்து நிலம் ஆர்ஜிதம் செய்யப்படும் திட்டம் கொண்டுவரப்பட்டது. 

இதற்காக கோவையில் வீரகேரளம், வடவள்ளி, வெள்ளக்கிணறு, கணபதி தெலுங்குபாளையம், காளப்பட்டி, விளாங்குறிச்சி மற்றும் சௌரிபாளையம் பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் வீட்டு வசதி திட்டம் செயல்படுத்த முன்மொழிவு செய்யப்பட்டது.  வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்த பின்னரும் சிலருக்கு இழப்பீடு வழங்கப்பட்டும், வழங்கப்படாமலும் உள்ளது. இதனால் பல கிராமங்களில் விவசாயிகள், பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நில ஆர்ஜித நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். 
_________

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe