பக்ரீத் பண்டிகை : வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலிசார் சோதனை

published 1 year ago

பக்ரீத் பண்டிகை :  வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலிசார் சோதனை

கோவை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல் அருகில் நிறுத்தப்பட்ட வாகனங்களின் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலிசார் சோதனை மேற்கொண்டனர்.

இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் பள்ளிவாசல்கள் மற்றும் மைதானங்களில் திரளான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் நாட்டில் பல்வேறு இடங்களில்  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் எல்லைகளில் இந்திய ராணுவத்தினர் தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் மாநகர காவல்துறை சார்பில் பள்ளிவாசல்கள் அருகே நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலிசார் நவீன கருவிகளை கொண்டு சோதனை மேற்கொண்டனர்.

மேலும் பள்ளிவாசல்கள் அருகே சந்தேகத்திற்கிடமாக வைக்கப்பட்டிருக்கும் பொருட்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe