வேளாண்மைப் பல்கலை.,யில் பட்டயப்படிப்பிற்கு விண்ணப்பம் சமர்ப்பித்தற்கான தேதி நீட்டிப்பு

published 1 year ago

வேளாண்மைப் பல்கலை.,யில் பட்டயப்படிப்பிற்கு விண்ணப்பம் சமர்ப்பித்தற்கான தேதி நீட்டிப்பு

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பட்டயப்படிப்பிற்கு விண்ணப்பம் சமர்ப்பித்தற்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்  பட்டயப்படிப்பிற்கு விண்ணப்பம் சமர்ப்பித்தற்கான தேதி நீட்டிக்கப்படுவதாக வேளாண்மை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிடுள்ள அறிக்கையில்,

இந்த கல்வியாண்டில் வேளாண்மை தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய பட்டயப்படிப்புகளுக்கு
இணையதளம் மூலமாக  விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை பெற்றோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்கலைக்கழகத்தால் பெறப்பட்டு வருகிறது ஆகையினால்விண்ணப்பித்தை பதிவேற்றுவதற்கான கடைசி தேதி வருகின்ற 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதார்கள்  விண்ணப்பங்களை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே
சமர்ப்பிக்குமாறும்  www.tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,  0422-8611345,
0422-6611346, 9488635077, 9486425076 என்ற தொலைபேசி உதவிச் சேவை எண்களிலும் [email protected] என்ற மின்னஞ்சல்(cmail மூலமாகவும் வாரநாட்களில் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe