கல்குவாரி வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை பாஜக-வினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு

published 1 year ago

கல்குவாரி வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை பாஜக-வினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு

கோவை:
கல்குவாரி வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக-வினர் இன்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தங்களது குறைகளை மனுக்களாக அளித்து வருகின்றனர். 

இதேபோல் கோவை தெற்கு பாஜக மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 10 நாட்களாக கிரஷர் மற்றும் கல்குவாரி நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கோவையில் கட்டுமான வேலைகள் ஸ்தம்பித்து விட்டது. பல லட்சம் கூலித் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.   

  தற்போது கல்குவாரி வேலை நிறுத்தத்தால் கேரளாவிற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. ஆனால் நம் கோவையில் ஒரு யூனிட் ஜல்லி கூட கையிருப்பு இல்லை. நம்மிடம் ஒரு யூனிட் 2000 ரூபாய்க்கு வாங்கி கடத்திச் செல்லப்பட்ட கனிம வளம், தற்பொழுது நம்மிடம் ஒரு யூனிட் ருபாய் 5000 வரை திருப்பி விற்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

கல்குவாரி மற்றும் கிரஷர் வேலை நிறுத்தத்தால் பொதுமக்களும் மற்றும் கட்டிட கூலித் தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கிரஷர் மற்றும் கல் குவாரி லாரி உரிமையாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதற்கு மூல காரணமாக இருக்கும் கேரளாவிற்கு கனிம வள கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
திராவிடர் விடுதலைக் கழகம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் செயல்படும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் வீட்டுப்பாடம் குறிப்பேட்டில் சாதி, மத  விவரங்களை குறிப்பிடும்படி மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் கட்டாயப்படுத்துகின்றனர். 

சாதி, மத அடையாளங்களை பள்ளி மாணவர்களின் விவரக் குறிப்பேட்டில் வெளிப்படையாக குறிப்பிட வைப்பது மாணவர்களிடையே தீண்டாமை உள்ளிட்ட பாகுபாடு உணர்வுகளை தூண்டும். எனவே இதனை தடை செய்யும் விதமாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
___________

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe