வேகமாக வளரும் கோவை.. அடுத்தடுத்த திட்டங்களால் மேலும் ஜொலிக்கும்..!

published 1 year ago

வேகமாக வளரும் கோவை.. அடுத்தடுத்த திட்டங்களால் மேலும் ஜொலிக்கும்..!

கோவை:

கோவை மாநகரம் சமீப காலத்தில் மாநில அளவிலும் சரி தேசிய அளவிலும் சரி கல்வி, தொழில்துறை, பொழுதுபோக்கு என பல துறைகளில் கவனிக்கப்படும் ஒரு நகரமாக உள்ளது.

அண்மையில் வெளியான தேசிய தரவரிசைக் கட்டமைப்பு (NIRF) வெளியிட்ட 2023க்கான தரவரிசை பட்டியலில் கோவையை சேர்ந்த பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணாம்மாள் கல்லூரி இந்திய அளவில் உள்ள பல்லாயிரக்கணக்கான பிரபல கல்லூரிகளை ஓரம் கட்டி 4 வது ஆண்டு இடம்பிடித்துள்ளன.

இங்கு அண்மையில் இன்போசிஸ், டெக் மகிந்திரா, பிர்லா சாப்ட், மைண்ட ட்ரீ (L&T குழுமத்தின் ஐ.டி பிரிவு) கால் பதித்தன. அத்துடன் சமீபத்தில் டாடா நிறுவனம் கூட இங்கே கால் பதிக்க உள்ளதாக தகவல்கள் வந்துகொண்டு இருக்கின்றன.

தென்னிந்தியாவின் முதல் லேசர் IMAX, இந்தியாவின் 2வது EPIQ திரையரங்கம், தமிழகத்தின் முதல் லுலு மால் (Hypermarket) என பல பெரிய சர்வதேச நிறுவனங்கள் தமிழகத்தில் வேறெங்கும் செல்லாமல் கோவை நோக்கி வருகின்றன.

கோவையில் உள்ள பல பிரபல நிறுவனங்கள் மீது பெரிய அளவில் முதலீடுகள் குவிகின்றன. உதாரணத்திற்கு முருகப்பா குழுமம் வாகனங்களுக்கான உதிரி பாகங்களை செய்யும் கோவையை சேர்ந்த ஜெயம் ஆட்டோ மோட்டிவ் நிறுவனத்தின் பெரும் பங்குகளை ரூ.160 கோடிக்கு வாங்கியுளதாகவும், அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு நிறுவனமான வார்பர்க் பின்கஸ் கோவையை சேர்ந்த குளியலறை சாதனங்கள் மற்றும் பிளம்பிங் துறை தீர்வுகளை வழங்கும் வாட்டர் டெக் கோவை பழமுதிர் நிலையத்தின் 70% வாங்கியுள்ளதென தகவல்கள் நிறுவனத்தின் பெரும் பங்குகளை ரூ. 2500 கோடிக்கு வாங்கியதாகவும், பிரபல பங்குகளை அமெரிக்க முதலீட்டு
நிறுவனமான வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல் ரூ.550-600 கோடிக்கும்
தெரிவிக்கின்றன.

இதை தவிர, கோவையின் உள்கட்டமைப்பு வசதிகளும் மேபடுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஜி.என். மில்ஸ் பகுதியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் சோதனை ஓட்டத்திற்காக திறக்கப்பட்டுள்ள நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்குள் பெரியநாய்கன்பாளையம் மேம்பால பணிகள் முடிக்க பட முயற்சிகள் நடைபெறுகிறது. சாய்பாபா காலனி மற்றும் சிங்கநல்லூரில் மேம்பால திட்டங்கள் விரைவில் துவங்குகிறது.

ஜூலை 15ல் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் பகுதிக்கான திட்ட அறிக்கை சமர்ப்பிக்க பட்டு, 1.5 ஆண்டுகளுக்குள் பணிகள் ஆரம்பிக்க திட்டங்கள் உள்ளன.

கோவை சர்வதேச விமான நிலையத்தின்
விரிவாக்கத்திற்காக நிலம் எடுக்கும் பணிகள் விரைவில் முடிய உள்ளது. தற்போது 90% நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்துள்ளன. மேற்கு புறவழி சாலை மற்றும் செம்மொழி பூங்கா பணிகள் விரைவில் துவங்க உள்ளது.

கோவை ரயில் நிலையமும் சீரமைக்கப்பட்டு 9 அடுக்கு மாடி கொண்ட அதிநவீன ரயில்வே நிலையமாக தரமுயர்த்தபட உள்ளது. இதுதவிர மாநகரை மேம்படுத்த மேலும் சில பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Credit : Covai Chronicle

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe