கோவையில் ஆட்டோ டிரைவர்கள் 2 பேருக்கு கத்திக்குத்து

published 1 year ago

கோவையில் ஆட்டோ டிரைவர்கள் 2 பேருக்கு கத்திக்குத்து

கோவை:

கோவை வடவள்ளி நாகராஜபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (35), வீர கேரளத்தை சேர்ந்தவர் அன்புராஜ் (42), இருவரும் ஆட்டோ டிரைவர்கள். சம்பவத்தன்று 2 பேரும் வீர கேரளத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் இரண்டு வாலிபர்கள் வந்தனர். 

அவர்களிடம் இந்த பகுதியில் பாலம் வேலை நடைபெறுவதால் வேறு வழியில் செல்லுமாறு இருவரும் கூறினர். அப்போது அவர்களுக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர் அன்புராஜ், ரத்தினபுரி கண்ணப்பன் நகரை சேர்ந்த சோபன் பாபு (26) என்பவரை தாக்கினார். 

பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் ஆத்திரத்தில் இருந்த சோபன்பாபு தனது நண்பர்கள் 3 பேருடன் ஆட்டோ டிரைவர்கள் இருக்கும் இடத்துக்கு சென்றார். பின்னர் மூன்று பேரும் சேர்ந்து அன்புராஜ், மணிகண்டன் ஆகியோரை தாக்கினர். அப்போது கண்ணப்பன் நகரை சேர்ந்த குணசேகரன் (28) என்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அன்புராஜ் மற்றும் மணிகண்டன் வயிற்றில் குத்தினார். பின்னர் மூன்று பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். 

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஆட்டோ டிரைவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
____________

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe