தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 17-ந் தேதி பொதுப் பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்.

published 1 year ago

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில்  17-ந் தேதி பொதுப் பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்.

கோவை : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப்பாண்டு இளம் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கான இணையதள வழி கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின்படி, அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. தொழில்முறைக் கல்வி பாடப்பிரிவினருக்கான இணையவழி கலந்தாய்வு நேற்று தொடங்கியது. 

நாளை (16-ம் தேதி) வரை நடக்கிறது. இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 18-ம் தேதி நடக்கிறது. பொதுப்பிரிவினருக்கான இணையவழி முதல்கட்ட கலந்தாய்வு வரும் 17-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடக்கிறது.

கலந்தாய்வில் பங்கேற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 20-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடக்கிறது. பொதுப்பிரினருக்கான நகர்வு முறை மற்றும் இணையதள வழி 2-ம் கட்ட கலந்தாய்வு வரும் 26-ம் தேதி மற்றும் 27-ம் தேதிகளில் நடக்கிறது. 

பொதுப்பிரிவில் இணையதள வழி இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொண்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 28-ம் தேதி மற்றும் 29-ம் தேதி நடக்கிறது. இணையதள வழி கலந்தாய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுடைய மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe