லுலு நிறுவனம்-கோவையில் மீண்டும் அடியெடுத்து வைக்கிறது!

published 1 year ago

லுலு நிறுவனம்-கோவையில் மீண்டும் அடியெடுத்து வைக்கிறது!

கோவை : தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக கோவை உள்ளது. இங்கு இல்லாத தொழில்நிறுவனங்களே இல்லை எனகூறும் அளவிற்கு வளர்ச்சி அடைந்து உள்ளது. இதனை வலு சேர்க்கும் வகையில் லுலு நிறுவனத்தின் உணவு பதப்படுத்தும் நிலையம் தொடங்க உள்ளது.

தமிழகத்தின் வளர்ச்சி அடையும் மாநிலங்களில் கோவை முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இங்கு இல்லாத தொழில் நிறுவனங்களே இல்லை என சொல்லும் அளவுக்கு கோவை மாநகரம் மிகப்பெரிய உச்சத்தை தொட்டுள்ளது.

கோவையில் மிகப்பெரிய நிறுவனமான லுலு மால் எனும் ஹைப்பர் மார்க்கெட் கோவையில் கடந்த மாதம் லட்சுமி மில் பகுதியில் திறக்கப்பட்டது.

இதற்கு பொதுமக்கள் மத்தியில் அவ்வளவு வரவேற்பு ஏற்பட்டது. திறந்த நாள் முதல் இன்று வரை சுற்றிப்பார்க்க வரும் கூட்டமாக இருந்தாலும் சரி, பொருட்கள் வாங்க வரும் கூட்டமாக இருந்தாலும் சரி, இரண்டும் சேர்ந்து லுலு மால் நிரம்பி வழிந்து வருகிறது.

இங்கு சாதாரணமாக வெளியில் கிடைக்கும் பொருட்களின் விலையை விட லுலு மால் எனும் ஹைப்பர் மார்க்கெட்டில் சலுகையில் கிடைப்பதால் இங்கு அதிகளவில் கூட்டம் அலைமோதுகிறது. வார நாட்களை விட விடுமுறை நாட்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. தற்போது விலை ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

லுலு மால் முன்பாக சில நாட்களாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் அதனை தொடர்ந்து சரி செய்து வந்தனர். மேலும் அந்த வளாகத்தில் உள்ள சிக்னல் கோளாறு காரணமாக அந்த சாலை மூடப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் இன்று வாடிக்கையாளர்கள் லுலு மால் எனும் ஹைப்பர் மார்க்கெட்டுக்கு சென்று வந்தனர்.

இது மட்டுமல்லாம லுலு வளாகத்தில் ஸ்டார்பக்ஸ் எனும் பிரபல காபி நிறுவனம் தனது கிளையை விரைவில் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இது கோவை மக்களுக்கு டபுள் டமாக்கா செய்தியாக இருந்தது. இந்நிலையில் லுலு மால் திறந்ததற்கு வணிகர்கள் சங்கங்களின் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. வணிகர்கள் சங்க தலைவர் முதல்-அமைச்சரை சந்தித்து இனியும் லுலுவை கோவைக்குள் அனுமதிக்க கூடாது என முறையிடப்போவதாக தெரிவித்தனர்.

தற்போது கோவையில் இன்னொரு லுலு வரப்போகிறது. கோவை லுலு மால் எனும் ஹைப்பர் மார்க்கெட் தொடங்கும் முன்பே கோவையில் இரண்டு இடங்களில் லுலு நிறுவனம் தனது கிளையை தொடங்கும் என அறிவித்திருந்தது. அதன்படி லுலு உணவு பதப்படுத்தும் பிரிவை கோவையில் மேட்டுப்பாளையத்தில் அமைய உள்ளது. ஆனால் கோவை மேட்டுப்பாளையத்தில் லுலு உணவு பதப்படுத்தும் இரண்டாவது மையம் தான் தொடங்க உள்ளது.

இதற்காக மேட்டுப்பாளையத்தில் விரைவில் ஆய்வு பணிகள் தொடங்கும் என்றும், விரைவில் உணவு பதப்படுத்தும் மையம் பணிகள் தொடங்கப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் முதல் உணவு பதப்படுத்தும் மையம் தமிழகத்தில் ஒட்டன்சத்திரத்தில் தொடங்கப்படும் என அறிவித்துள்ளது. எனவே அங்கு முதலில் தொடங்கப்பட்டு பின்னர் கோவையில் தொடங்கப்படலாம் எனவும் தெரிகிறது.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe