கோவையில் 14 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் விதமாக பிரம்மாண்ட ஐ.டி பார்க்..!

published 1 year ago

கோவையில் 14 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் விதமாக பிரம்மாண்ட ஐ.டி பார்க்..!

கோவை: கோவை டைடல் பார்க் பகுதியில், எல்காட் சார்பில், 'ஐ.டி., டவர்' கட்டப்பட்டு வருகிறது.

சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் 114.6 கோடி ரூபாய் மதிப்பில், இந்த தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டப்படுகிறது.

ஆறு தளங்களைக் கொண்ட இக்கட்டடம், பார்க்கிங் உட்பட அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியது.

இங்கு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல்தொழில்நுட்ப சேவைகள் சார்ந்த 26 நிறுவனங்களுக்கு இடமளிக்க இயலும். இதன் வாயிலாக, 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஜனவரியில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

பணிகள் நிறைவடையாததால், ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், பெரும்பான்மைப் பணிகள் நிறைவடைந்துள்ளதால், வரும் செப்டம்பரில் திறக்கப்படும் என கூறப்படுகிறது.

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் குமரகுருபரன், 'கோவை எல்காட் பூங்காவில் கட்டப்பட்டு வரும் 2.5 லட்சம் சதுர அடி பரப்புள்ள ஐ.டி., டவர் வரும் செப்டம்பரில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது' என தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe