திருப்பூர் குமரன் நினைவிடம்..!தற்போதைய நிலை..?

published 1 year ago

திருப்பூர் குமரன் நினைவிடம்..!தற்போதைய நிலை..?

Tirupur Kumaran Memorial :

 சுதந்திரப் போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் நினைவு பூங்காவின் தற்போதைய நிலை பற்றி பார்க்கலாம்.

திருப்பூர் ரயில் நிலையத்திற்கு அருகில் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிர் தியாகம் செய்தவர்களில் ஒருவரான திருப்பூர் குமரன் நினைவிடம் அமைந்துள்ளது. இங்குள்ள திருப்பூர் குமரனின் மணி மண்டபமானது காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டு இயங்கி வருகிறது.

இந்நிலையில், இங்கு அதிக சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட காலமாகவே மக்கள் மனதில் உள்ளது. அத்துடன் திருப்பூர் குரமனின் நினைவுத் தூண் திருப்பூர் சவுத் காவல் நிலையம் எதிரே அமைக்கப்பட்டுள்ளது. இது போதுமான வசதிகளோ பாதுகாப்புகளோ ஏதுமின்றி சாலை மேல் அமைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பல்வேறு தலைவர்களின் நினைவிடங்கள் சிறப்பான விதத்தில் வடிவமைக்கப்பட்டு நன்கு பராமரிக்கப்படுகின்றன. ஆனால், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறை தாக்குதலில் உயிர் தியாகம் செய்த திருப்பூர் கொடிகாத்த குமரனின் நினைவிடம் உரிய பராமரிப்பின்றி இருப்பது பொதுமக்கள் மற்றும் ஆர்வலளர்கள் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe