கோவை-சத்தி சாலை விரிவாக்கத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு

published 1 year ago

கோவை-சத்தி சாலை விரிவாக்கத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு

கோவை: கோவை-சத்தி சாலை விரிவாக்கம் செய்ய விவசாய நிலங்களை கையகப்படுத்த முயல்வதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை-சத்தி புறவழிச்சாலையை குறுகலாக உள்ள நிலையில்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாகவும், இந்த சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை  விடுத்து வருகின்றனர்

இதனிடையே குரும்பம்பாளையம் முதல் சத்தியமங்கலம் வரை சுமார் 30 கிலோ மீட்டருக்கு சாலை விரிவாக்கம் செய்ய பணிகள் துவங்க உள்ளன. இந்த நிலையில், சாலை விரிவாக்கத்திற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சிப்பதாக கூறி அன்னூர் சுற்றுவட்டாரப்பகுதி விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிம் மனு அளித்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “சத்தி சாலையை ஏற்னவே 5 அடிக்கு அகலப்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து நெரிசலை தவிற்க இதுவே போதுமானது. ஆனால் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சி நடக்கிறது. 

இதனால் தென்னை, வாழை, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ள விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். சுமார் 1000 ஏக்கர் விவசாய நிலம் வீணாகும். இதனை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.” என்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe