கோவை – மதுரைக்கு வரும் அமெரிக்க ஐடி நிறுவனங்கள் : பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்!

published 1 year ago

கோவை – மதுரைக்கு வரும் அமெரிக்க ஐடி  நிறுவனங்கள் : பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்!

கோவை : தமிழ்நாட்டில் பல மாவட்டங்கள் கல்வித்துறையில் சிறந்து விளங்கும் காரணத்தால் வெளிநாட்டு ஐடி சேவை  நிறுவனங்கள்  கோவை, மதுரை, சேலம், திருச்சி  ஆகிய  மாவட்டத்தில் புதிய அலுவலகத்தை  திறப்பது மட்டும் அல்லாமல் அப்பகுதி  பட்டதாரிகளுக்கு  பணி  வழங்குகிறது.

கோயம்புத்தூரில் அமெரிக்காவின்  ஆடிட்டிங் சேவை  நிறுவனமான சிகிச் (Sikich), தனது  அலுவலகத்தை திறந்து செயல்படத்தொடங்குவதன்  மூலம் இந்தியாவில்தனது  இருப்பை விரிவாக்க உள்ளது.

இந்தியாவில் இதற்கு முன்பு Sikich நிறுவனம் அகமதாபாத் மற்றும் பெங்களூர் ஆகிய பகுதிகளில் அலுவலகத்தை வைத்திருக்கும் வேளையில் கோயம்புத்தூரில் 3வது அலுவலகத்தை திறந்துள்ளது

கோவை அலுவலகத்தை விரிவாக்கம் செய்ய  Sikich நிறுவனம் தனது முக்கிய கூட்டணி நிறுவனமான அகோடீடியா டெக்னாலஜிஸ் (Acodeidea Technologies)  நிறுவனத்தை தன்னுடன் முழுமையாக இணைத்துள்ளது

மதுரையில் மாபெரும் பின்னாக்கல் அலுவலகத்தை முதல்வர்  ஸ்டாலின் திறந்து  வைத்த நிலையில், தற்போது அமெரிக்காவில்  இயங்கி வரும்  2 முன்னணி நிறுவனங்கள் மதுரையில்  தனது அலுவலகத்தை திறந்துள்ளது. இந்த  நிறுவனம் இன்ஜினியரிங் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில்  பட்டம்பெற்ற  பட்டதாரிகளுக்கு அதிகப்படியான வேலை வாய்ப்பினை  வழங்க உள்ளது.

தயா சைபர்  பூங்காவில் கட்டுமான மாடலிங்  மற்றும் கட்டமைப்பு ஸ்டீல் டீடைலிங்  சேவை  நிறுவனமான  "கேட்மேன்" (CadMan)  தங்களுடைய  டெவலப்மென்ட்  சென்டரை  திறந்து  உள்ளது. இதன்  தலைமையிடம் அமெரிக்காவில்  உள்ள  டெலாவேர் பகுதி  ஆகும்.

அமெரிக்காவின் நியூயார்க்-ஐ  தலைமையிடமாக கொண்டு செயல்படும் முன்னணி  உலகளாவிய டிஜிட்டல்  சேவைகள்  மற்றும் தீர்வுகள்  வழங்கும் நிறுவனமான   Presidio   தங்களுடைய   அலுவலகத்தை  திறந்துள்ளது.

 

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe