ஓய்வூதியம் சார்ந்த மனுக்களுக்கு ஆகஸ்ட் 4-ஆம் தேதியே கடைசி நாள்: கோவை ஆட்சியர்

published 1 year ago

ஓய்வூதியம் சார்ந்த மனுக்களுக்கு ஆகஸ்ட் 4-ஆம் தேதியே கடைசி நாள்: கோவை ஆட்சியர்

கோவை: கோவை மாவட்டத்தில் பல்வேறு அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் வசித்து வரிகின்றனர். இவர்களுள் பலருக்கு ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியப் பலன்கள் இதுவரை கிடைக்கப் பெறாமல் இருக்கும் நிலை உள்ளது. 

இவ்வாறு ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியம் சார்ந்த பலன்களில் ஏதேனும் குறைகள் இருப்பின், அதைப்பற்றி விவரங்கள், பணியாற்றிய அரசுத்துறை மற்றும் எந்த அலுவலர் மூலம் குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிட்டு ஓய்வூதிய குறைதீர்ப்பு மாதிரிப் படிவத்தைப் பூர்த்தி செய்து இரட்டை பிரதிகளில் ஆட்சியரிடம் வரும் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதிக்குள் கிடைக்கும் படியாக நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பலாம் எனக் கோவை ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த படிவங்களை அளிக்கும் பொழுது இரண்டு பிரதிகள் அளிப்பது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஓய்வூதியக் குறை பற்றி மனு அனுப்ப வேண்டிய மாதிரிப்படிவத்தில் பெயர் மற்றும் முகவரி, பி.பி.ஓ. எண், ஓய்வுபெற்ற நாள், கடைசியாக வகித்த பதவி மற்றும் துறை, குறைகள் விவரம் குறித்து தனித்தாளில் விரிவாக எழுதி படிவத்துடன் இணைக்க வேண்டும். முந்தைய தகவல் ஏதும் இருப்பின் அதன் விவரம், இது தொடர்பாக வழக்கு ஏதும் தொடர்ந்திருந்தால் அதன் விவரம், குறைகளை நிவர்த்தி செய்யவேண்டிய அலுவலகம் மற்றும் அலுவலர் விவரம் ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும்.

ஓய்வூதிய குறைதீர்ப்பு கூட்டம் வரும் 30-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு ஆட்சியர் அலுவலகம், மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த நேர்முகக் கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடையுமாறு ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe