12 ராசிகளுக்குமான இன்றைய (28ம் தேதி ) ராசிபலன்
மேஷம்
அரசு சார்ந்த பணிகளில் பொறுமை வேண்டும். உலகியல் நடவடிக்கையால் மனதில் மாற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் அலைச்சல்கள் மேம்படும். நிதானம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
அஸ்வினி : பொறுமை வேண்டும்.
பரணி : தாமதம் உண்டாகும்.
கிருத்திகை : அலைச்சல்கள் மேம்படும்.
---------------------------------------
ரிஷபம்
பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதரர் வகையில் ஆதரவு கிடைக்கும். வியாபார பணிகளில் சில நுட்பங்களை கற்றுக் கொள்வீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் வெற்றியடையும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். வர்த்தகப் பணிகளில் லாபம் உண்டாகும். பயணம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : புரிதல் ஏற்படும்.
ரோகிணி : ஆதரவான நாள்.
மிருகசீரிஷம் : லாபம் உண்டாகும்.
---------------------------------------
மிதுனம்
எதிராக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள். தாய்மாமன் வழியில் அனுகூலம் ஏற்படும். பணி நிமிர்த்தமான செயல்களில் புதுமையான சூழல் அமையும். மனநிலையில் சில மாற்றங்கள் ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கூட்டு வியாபாரத்தில் பொறுமை வேண்டும். அசதிகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மிருகசீரிஷம் : அனுகூலம் ஏற்படும்.
திருவாதிரை : மாற்றமான நாள்.
புனர்பூசம் : பொறுமை வேண்டும்.
---------------------------------------
கடகம்
வருமான முன்னேற்றத்தை பற்றி சிந்திப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். சக ஊழியர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிலும் சிக்கனமாகச் செயல்படுவீர்கள். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். வியாபார பணிகளில் புதிய அறிமுகம் உண்டாகும். குழப்பம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
புனர்பூசம் : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
பூசம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
ஆயில்யம் : அறிமுகம் உண்டாகும்.
---------------------------------------
சிம்மம்
பயணங்களால் அனுபவம் உண்டாகும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பாரம்பரியம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு உண்டாகும். உடலில் இருந்துவந்த சோர்வுகள் குறையும். வரவுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : அனுபவம் உண்டாகும்.
பூரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திரம் : சோர்வுகள் குறையும்.
---------------------------------------
கன்னி
உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் துணையாக இருப்பார்கள். சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வாகனத்தில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை அறிந்து கொள்வீர்கள். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
உத்திரம் : முக்கியத்துவம் மேம்படும்.
அஸ்தம் : தீர்வு கிடைக்கும்.
சித்திரை : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------
துலாம்
உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். முகத்தில் தெளிவும், இளமையும் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். வேலையாட்களை தட்டிக்கொடுத்து செயல்படுவது நல்லது. பணி நிமிர்த்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
சித்திரை : மதிப்பு அதிகரிக்கும்.
சுவாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
விசாகம் : கலகலப்பான நாள்.
---------------------------------------
விருச்சிகம்
தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். குறுகிய தூர பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். அரசு காரியங்களில் கவனம் வேண்டும். புதுமையான சிந்தனைகள் பிறக்கும். செயல்களை திட்டமிட்டு செயல்படுத்தவும். உறவினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உறவினர்களை பற்றிய புரிதல் மேம்படும். முன்கோபமின்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
விசாகம் : மாற்றமான நாள்.
அனுஷம் : திட்டமிட்டு செயல்படவும்.
கேட்டை : புரிதல் மேம்படும்.
---------------------------------------
தனுசு
புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையை தரும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். இறை சார்ந்த பணிகளில் மதிப்பு கிடைக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : விழிப்புணர்வு வேண்டும்.
பூராடம் : நன்மையான நாள்.
உத்திராடம் : மதிப்பு கிடைக்கும்.
---------------------------------------
மகரம்
குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். வெளியூர் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் கிடைக்கும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். செல்வாக்கு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
அவிட்டம் : ஈடுபாடு ஏற்படும்.
---------------------------------------
கும்பம்
குடும்பத்தில் சுபகாரிய எண்ணங்கள் ஈடேறும். வியாபார பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். வெளியூர் தொடர்பான பணி வாய்ப்புகள் கிடைக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். எதிலும் கட்டுப்பாடுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். பிறமொழி சார்ந்த மக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். ஆசைகள் பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
அவிட்டம் : எண்ணங்கள் ஈடேறும்.
சதயம் : மேன்மை உண்டாகும்.
பூரட்டாதி : ஆதாயம் ஏற்படும்.
---------------------------------------
மீனம்
புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் சிறு தூரப் பயணம் சென்று வருவீர்கள். எதிர்பார்த்த தன உதவிகள் கிடைக்கும். புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் பிறக்கும். திடீரென புதிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆடம்பர செலவுகளை படிப்படியாக குறைக்கவும். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
பூரட்டாதி : தடைகள் விலகும்.
உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
ரேவதி : விரயம் குறையும்.
-----------------------------------