கோவையில் சொகுசு காரில் சென்று திருடும் கும்பல்..!

published 1 year ago

கோவையில் சொகுசு காரில் சென்று திருடும் கும்பல்..!

கோவை: மசக்களிபாளையம் செங்குட்டை மேற்கு வீதி பகுதியைச் சேர்ந்தவர், சதாசிவம் (வயது 60). ஆவின் பால் முகவரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டைப்பூட்டி விட்டு, சாவியை வீட்டின் வெளியே மறைத்து வைத்து விட்டு வெளியே சென்றார்.

அப்போது இதனை நோட்டமிட்ட பெ க் ஒருவர் அந்த சாவியை எடுத்து வீட்டைத் திறந்து, அலமாரியிலிருந்த 15 சவரன் நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தைத் திருடிவிட்டு மீண்டும் வீட்டின் கதவைப் பூட்டி, சாவியை ரகசிய இடத்தில் வைத்து விட்டுத் தப்பிச் சென்றார்.

வெளியே சென்ற சதாசிவம் வீட்டிற்குத் திரும்ப வந்து பார்த்த பின் நகை மற்றும் பணம் காணாமல் போனது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும், திருட்டு குறித்து காவல்துறை அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

இதில் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறை விசாரணை நடத்தியதில் கரூர் மாவட்டம், வெங்கமேட்டைச் சேர்ந்த ரமணி (வயது 33) என்பது தெரியவந்தது.

இதையடுத்து காவல்துறை அவரை கைது செய்தனர்.

மேலும், அவருக்கு உதவிய கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வினையா (36) என்பவரையும் காவல்துறை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 15 சவரன் நகையை மீட்டனர். மேலும், விசாரணையில் ரமணி திருட்டு வழக்கில், கோவை மத்திய பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது, அங்கு போக்சோ வழக்கில் கைதாகி சிறையிலிருந்த வினையா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது என்பது தெரிய வந்தது.

இதையடுத்து இருவரும் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டுத் திருட முடிவு செய்தனர்.

சிறையிலிருந்து வெளியே வந்ததும் அவர்கள் வாடகைக்கு வீடு தேடுவது போல் ஒவ்வொரு வீதியாகச் சென்று பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு நகை, பணம் திருடியது தெரியவந்தது.

இச்சம்பத்தன்று சதாசிவம் வீட்டிற்கு இருவரும் கால் டாக்சியில் வந்துள்ளனர். பின்னர், காரில் வினையா அமர்ந்து கொண்டார். ரமணி மட்டும் காரை விட்டு இறங்கிச் சென்று, சதாசிவம் வீட்டில் நகை, பணத்தைத் திருடிவிட்டு மீண்டும் காரில் ஏறித் தப்பிச் சென்றுள்ளனர்.

இதுதவிர, ரமணி கோவை, நாமக்கல், திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் பல்வேறு வீடுகளில் இதுபோன்று கைவரிசை காட்டி நகை, பணம் திருடியதும், மேற்கண்ட மாவட்டங்களில் ரமணி மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்ததாக காவல்துறை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe