கோவையில் போலி நகைகளைக் கொடுத்து 1 கிலோ தங்கம் மோசடி 

published 1 year ago

கோவையில் போலி நகைகளைக் கொடுத்து 1 கிலோ தங்கம் மோசடி 

கோவை : கோவையில் போலி நகைகளைக் கொடுத்து நகைப்பட்டறை வியாபாரியிடம் 1 கிலோ தங்கம் மோசடி நடைபெற்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கடைவீதியைச் சேர்ந்தவர் தியாகராஜன்(56). நகை வியாபாரி. இவர் பெங்களூரில் உள்ள நகைக்கடையைச் சேர்ந்த சுனில்(50) என்பவரிடம் தொழில் ரீதியான பழக்கம் வைத்திருந்தார். அவரிடம் தங்க நகை மற்றும் தங்கக் கட்டிகளைக் கொடுத்து வியாபாரம் செய்து வந்தார். 

இந்நிலையில், நேற்று கோவை வந்த சுனில் 963 கிராம் எடையிலான தங்க நகைகளைத் தியாகராஜனிடம் கொடுத்து விட்டு அவரிடம் இருந்து 1003 கிராம் தங்கக் கட்டிகளை வாங்கினார். பின்னர் 963 கிராம் நகை போக மீதம் கொடுக்க வேண்டிய தொகையைச் சிறிது நேரத்தில் கொண்டு வந்து தருவதாக அங்கிருந்து சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தியாகராஜன் சுனில் கொடுத்த தங்க நகைகளைச் சோதனை செய்தார். அப்போது அவர் கொடுத்துச் சென்ற 963 கிராம் தங்க நகையும் போலியானது என்பது தெரியவந்தது. 

போலி நகைகளைக் கொடுத்து விட்டு 1003 கிராம் தங்கக் கட்டிகளை வாங்கி மோசடி செய்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தியாகராஜன் அவரது செல்போன் எண்ணுக்குத் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து தியாகராஜன் கடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பு

காரின் பேரில், போலி நகைகளைக் கொடுத்து 1 கிலோ தங்கக் கட்டி வாங்கி மோசடி செய்த சுனில் மீது போலீசார் நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe