தையல் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டம்

published 1 year ago

தையல் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை: தையல் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம். தையல் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் "12 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் ஓய்வூதியத்தை 3000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், 200 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும், அனைத்து விதமான பண பயன்களையும் உயர்த்தி வழங்க வேண்டும், ஆன்லைன் சர்வர்களில் அடிக்கடி ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்திட வேண்டும், அனைத்து பண பயன்களும் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும், தையல் கூட்டுறவுச் சங்கத்தில் தமிழக அரசின் இலவச சீருடை தைக்கும் தையல் தொழிலாளர்களுக்கு எட்டு ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் கூலியை உயர்த்தி வழங்கிட வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகிறது.

மாநிலம் முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாகக் கோவை மாவட்ட அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். சிஐடியு கோவை மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கோவை மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கம், இந்தியத் தொழிற்சங்க மையம், அமைப்புசாரா சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe