கோவையில் புத்தம் புது பொலிவுடன் ஆம்னி பஸ் ஸ்டாப் !

published 1 year ago

கோவையில் புத்தம் புது பொலிவுடன் ஆம்னி  பஸ் ஸ்டாப் !

கோவை  :  தமிழ் நாட்டில் வளர்ச்சியடையும் மாவட்டங்களில் கோவை இரண்டாவது இடத்தில் உள்ளது . கோவையில் வேலைவாய்ப்புகள் அதிக அளவில் உள்ளதால் வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களிலிருந்து வந்து இங்கே வேலை பார்க்கின்றன.

கோவை மக்களைப் பொறுத்த வகையில் பேருந்துகளிலே  பெருமளவில் பயணம்  செய்கின்றன. இதனை மனதில் கொண்டு கோவை  மாநகராட்சி சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வெளிமாவட்ட மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் ஆம்னி பேருந்து நிலையத்தை சீரமைக்கக் கோரிக்கை பொதுமக்கள் கோரிக்கை சார்பில் வைக்கப்பட்டது .

கோவையில் மாநகராட்சி ஆணையர் பிரதாப்  பல்வேறு வளர்ச்சி திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் கோவை மாநகராட்சி சார்பில் ஆம்னி பேருந்து நிலையத்தைச் சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிதாகக் கட்டப்படும் ஆம்னி பேருந்து  நிலையம்  சர்வதேச அளவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் நவீன கழிப்பறை வசதி, புட் கோர்ட், தாய்ப்பால் கொடுக்கும் அறை, அதிநவீன சீலிங், டிஜிட்டல் திரை மற்றும் ஸ்பீக்கர் சிஸ்டம் போன்ற வசதிகளும் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பஸ் நிலையத்தில் தனியார் பேருந்துகளை நிறுத்துவதற்கு ஏற்ப தனியான இடங்களும் அமைக்கப்பட உள்ளன. இது தொடர்பான திட்டம் அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்தார்.

சர்வதேச அளவில் மாறப்போகும் ஆம்னி பேருந்து நிலையத்தின் புகைப்படத் தொகுப்புகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்குச் செவி சாய்க்கும் வகையில் ஆம்னி பஸ் நிலையம் புத்தம் புது பொலிவுடன் சீரமைக்கப்பட இருப்பது   மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe