கோவையில் மகளிர் உரிமைத்திட்டத்தில் பதிவு செய்யாதோருக்கு சிறப்பு முகாம்

published 1 year ago

கோவையில் மகளிர் உரிமைத்திட்டத்தில் பதிவு செய்யாதோருக்கு சிறப்பு முகாம்

கோவை: கோவை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் விண்ணப்ப விநியோகமானது இரண்டு கட்டங்களாக நடத்திட தீர்மானிக்கப்பட்டு முதல் கட்டமாக கடந்த 24ம் தேதி முதல் வரும் 4ம் தேதி முடிய நடைபெற்று வருகிறது. 

இதில் பொது மக்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள முகாம்களில் விண்ணப்பங்கள் பெற்று பதிவு செய்து வருகிறார்கள். சில குடும்ப அட்டைதாரர்கள் மட்டும் இன்னும் பதிவு செய்யப்படாமல் உள்ளதாக தெரிய வருகிறது.

எனவே விண்ணப்பங்கள் பெற்று பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்கான சிறப்பு முகாமானது ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள முகாமிலேயே வரும் 3 மற்றும் 4ம் ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. 

எனவே பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை இந்த தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பதிவு செய்திடுமாறும், விண்ணப்பம் இதுவரை பெறாதவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரேஷன் கடையின் விற்பனையாளரிடம் பெற்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பத்தினை பதிவு செய்திடுமாறும் கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe