கோவை கிணத்துக்கடவு மேம்பாலத்தின் நிலை என்ன?

published 1 year ago

கோவை கிணத்துக்கடவு மேம்பாலத்தின் நிலை என்ன?

கோவை : கோவையில் மிக முக்கியமான சாலைகளில் ஒன்றான கோவை-பொள்ளாச்சி இடையே நான்கு வழிச்சாலை  கிணத்துக்கடவு மேம்பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் ஒத்தக்கால் மண்டபம், கிணத்துக்கடவு, தாமரைக்குளம், கோவில்பாளையம், ஆச்சிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் சாலையின் நடுவே நெடுஞ்சாலைத் துறை சார்பில் 1,000-க்கும் மேற்பட்ட எல்.இ.டி.மின் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளதால்,வாகனங்கள்  சென்று வர வெளிச்சமாக இருந்தது.

கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் கிணத்துக்கடவு அருகே ஒளிராத தெருவிளக்குகள் கடந்த சில நாட்களாகப் பல இடங்களில் இருட்டாக கிடக்கிறது. முக்கியமாக, கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ்ப் பகுதியில் 2½ கிலோ மீட்டர் தூரத்திற்கு சில இடங்களைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் மின்விளக்குகள் ஒளிராமல் உள்ளன. 

இதனால் இரவு நேரங்களில் மேம்பாலத்தின் கீழ்ப் பகுதியில் வரும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உளாகி விபத்தில் சிக்கி வருகின்றனர். இந்த பகுதியில் விளக்குகள்  இல்லை என்ற நிலையில் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு அதிகம்  உள்ளதால், நடந்து செல்வோர் அச்சம் அடைந்து உள்ளனர்.

வழிப்பறி சம்பவங்கள் இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கிணத்துக்கடவு மேம்பாலம் அருகில் ஏற்கனவே செல்போன் பறிப்பு உள்ளிட்ட வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று உள்ளது. தற்போது மின் விளக்குகளும் ஒளிராமல் கிடப்பதால், அந்த குற்ற வழக்குகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அங்குச் செல்லவே அச்சமாக உள்ளது. எனவே மின் விளக்குள் மீண்டும் ஒளிர அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும் என்றனர்.

கிணத்துக்கடவு மேம்பாலம் அருகே ஏற்கனவே செல்போன் பறிப்பு உள்ளிட்ட வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது எனப் பொதுமக்கள் கூறுகின்றன. தற்போது மின் விளக்குகளும் ஒளிராமல் கிடப்பதால், அங்குச் செல்லவே அச்சமாக உள்ளது. இதனால் குற்ற வழக்குகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே மின் விளக்குள் மீண்டும் ஒளிர அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும் என்றனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe