புஷ்பா படப் பாணியில் சந்தனக் கட்டைகள் கடத்தல் - மடக்கிப் பிடித்த கோவை போலிசார்

published 1 year ago

புஷ்பா படப் பாணியில் சந்தனக் கட்டைகள் கடத்தல் - மடக்கிப் பிடித்த கோவை போலிசார்

கோவை: கோவை போத்தனூர் போலிசார் வெள்ளலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, கர்நாடக பதிவு எண் கொண்ட லாரி ஒன்று வந்துள்ளது.

சந்தேகத்தின் அடிப்படையில் லாரியை நிறுத்த போலிசார் முற்பட்ட போது லாரி நிற்காமல் சென்றுள்ளது.

இதனையடுத்து போத்தனூர் காவல்துறையினர் லாரியை பின்தொடர்ந்து சென்று மடக்கி நிறுத்தி உள்ளனர். பின்னர் லாரிய சோதனையிட்ட போது அதில் மூட்டை மூட்டையாகச் சந்தனக் கட்டைகள் இருந்தது தெரியவந்தது. 

இதனையடுத்து ஓட்டுநர் மனோஜை பிடித்த போலிசார், லாரியை மாவட்ட வன அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.

இது குறித்து வனத்துறையினர் மற்றும் போலிசார் விசாரணை மேற்கொண்டதில், அவை கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் இருந்து சென்னைக்கு எடுத்துச் செல்லப்படுவது தெரியவந்தது. 

இதில் 57 மூட்டைகளில் இருந்து 1051 கிலோ சந்தனக் கட்டைகள் பிடிபட்டுள்ளன.இது குறித்து ஓட்டுநர் மனோஜிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe