12 ராசிகளுக்குமான இன்றைய (05ம் தேதி ) ராசிபலன்
மேஷம்
பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்மறை சிந்தனைகளை தவிர்க்கவும். எதிலும் நிதானமாக செயல்பட வேண்டும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். உறவினர்களின் வகையில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பணி நிமிர்த்தமான கோப்புகளில் அலட்சியமின்றி செயல்படவும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
அஸ்வினி : தீர்வு கிடைக்கும்.
பரணி : பயணங்கள் உண்டாகும்.
கிருத்திகை : போட்டிகள் அதிகரிக்கும்.
---------------------------------------
ரிஷபம்
மனதளவில் புதிய தன்னம்பிக்கை ஏற்படும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். எதிர்பாராத சிலரின் சந்திப்பு உண்டாகும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். விருப்பமான பொருட்களை வாங்குவீர்கள். சமூகப் பணிகளில் மேன்மை ஏற்படும். எதிர்ப்புகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்
கிருத்திகை : தன்னம்பிக்கை ஏற்படும்.
ரோகிணி : சந்திப்பு உண்டாகும்.
மிருகசீரிஷம் : மேன்மையான நாள்.
---------------------------------------
மிதுனம்
அணுகுமுறையில் சில மாற்றங்கள் உண்டாகும். வாடிக்கையாளர்களின் ரசனைகளை புரிந்து கொள்வீர்கள். மறைமுகமான போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்படும். தனவரவுகளால் திருப்தியான சூழல் உண்டாகும். சமயோசிதமான பேச்சுக்களால் இழுபறியான பணிகளை முடிப்பீர்கள். வரவுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிருகசீரிஷம் : மாற்றங்கள் உண்டாகும்.
திருவாதிரை : லாபகரமான நாள்.
புனர்பூசம் : இழுபறிகள் மறையும்.
---------------------------------------
கடகம்
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். புதியவர்களின் நட்பால் உற்சாகம் உண்டாகும். வியாபாரத்தில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். மனதளவில் தெளிவு ஏற்படும். இன்னல்கள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : ஒற்றுமை மேம்படும்.
பூசம் : உற்சாகம் உண்டாகும்.
ஆயில்யம் : தெளிவு ஏற்படும்.
---------------------------------------
சிம்மம்
மற்றவர்களின் பேச்சுக்களால் வருத்தங்கள் நேரிடும். இறுமாப்பு சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. மறைமுகமான சில விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். நிதி பற்றாக்குறையால் கடன்கள் அதிகரிக்கும். நண்பர்களிடையே அனுசரித்துச் செல்லவும். புதிய நபர்களிடம் கவனத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகம் : வருத்தங்கள் நேரிடும்.
பூரம் : விமர்சனங்கள் நீங்கும்.
உத்திரம் : போட்டிகள் அதிகரிக்கும்.
---------------------------------------
கன்னி
குழந்தைகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதையும் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : ஒத்துழைப்பான நாள்.
அஸ்தம் : ஆதரவு மேம்படும்.
சித்திரை : எண்ணங்கள் கைகூடும்.
---------------------------------------
துலாம்
அரசு பணிகளால் ஆதாயம் உண்டாகும். உடனிருப்பவர்களால் லாபம் ஏற்படும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் மதிப்பு மேம்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். யூகங்களால் மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். உதவிகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : லாபம் ஏற்படும்.
சுவாதி : முதலீடுகள் அதிகரிக்கும்.
விசாகம் : மாற்றம் பிறக்கும்.
---------------------------------------
விருச்சிகம்
உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழல் அமையும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். உத்தியோகத்தில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தின் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். புதுவிதமான கனவுகளை உருவாக்குவீர்கள். மறதி குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
அனுஷம் : அனுசரித்துச் செல்லவும்.
கேட்டை : கனவுகள் பிறக்கும்.
---------------------------------------
தனுசு
திட்டமிட்ட காரியங்கள் நிறைவு பெறும். வெளிவட்டாரத்தில் அனுபவம் உண்டாகும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். குழந்தைகளை பற்றிய புரிதல் ஏற்படும். தாயாரின் ஆரோக்கியம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உழைப்புக்கு உண்டான ஆதாயம் கிடைக்கும். அசதிகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மூலம் : அனுபவம் உண்டாகும்.
பூராடம் : புரிதல் ஏற்படும்.
உத்திராடம் : ஆதாயம் கிடைக்கும்.
---------------------------------------
மகரம்
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசாங்கத்தால் ஆதாயம் ஏற்படும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் மூலம் ஒத்துழைப்பான சூழல் அமையும். மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : ஆதாயம் ஏற்படும்.
திருவோணம் : இழுபறிகள் குறையும்.
அவிட்டம் : வெற்றிகரமான நாள்.
---------------------------------------
கும்பம்
குடும்பத்தில் அமைதியான சூழல் ஏற்படும். செலவுகளை குறைப்பதற்கான சூழல் அமையும். தடைபட்ட பணிகள் நிறைவு பெறும். வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எளிமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
அவிட்டம் : அமைதியான நாள்.
சதயம் : பேச்சுக்களை குறைக்கவும்.
பூரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.
---------------------------------------
மீனம்
தாமதமான சில பணிகளால் மனதில் குழப்பம் ஏற்படும். மற்றவர்களின் செயல்களில் கருத்துகள் கூறுவதை தவிர்க்கவும். போட்டிகளை சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். அக்கம்-பக்கம் வீட்டாருடன் அளவாக இருக்கவும். உடல்நலத்தில் கவனம் வேண்டும். போட்டிகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : குழப்பமான நாள்.
உத்திரட்டாதி : பக்குவம் உண்டாகும்.
ரேவதி : கவனம் வேண்டும்.
---------------------------------------