கோவையில் விவசாயிகள் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்

published 1 year ago

கோவையில் விவசாயிகள் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்

கோவை: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். 

விவசாயிகளின் பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தமிழகம் முழுவதும் மனு கொடுக்கும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

" தமிழ்நாடு அரசு தென்னை மற்றும் பனை மரத்திலிருந்து கள் இறக்கி விற்பதற்கு அனுமதி வழங்க வேண்டும், தேங்காய் எண்ணெய் கடலை எண்ணெய் நல்லெண்ணெய் உள்ளிட்டவற்றை உழவர்களிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து மானிய விலையில் நியாய விலை கடைகளில் விற்பனை செய்ய வேண்டும், 

கொப்பரை தேங்காய் குறைந்தபட்ச ஆதார விலை 150 நிர்ணயம் செய்ய வேண்டும், தமிழ்நாடு அரசு பச்சை தேங்காய் ஒரு டன் 40,000 ரூபாய்க்குக் கொள்முதல் செய்ய வேண்டும், தமிழ்நாடு அரசு நெல் குவின்டாலுக்கு 3000 கரும்பு ஒரு டன்னுக்கு 5000 மரவள்ளிக்கிழங்கு ஒரு டன்னுக்கு 12,000 மஞ்சள் ஒரு குவின்டாலுக்கு 15,000 மக்காச்சோளம் ஒரு குவின்டாலுக்கு 3000 மாட்டுப்பால் ஒரு லிட்டர் 50 எருமைப் பால் ஒரு லிட்டர் 75 ரூபாய் என வழங்கிட வேண்டும். 

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை அனைத்து வேளாண் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனைத்து உயர் மின் கோபுரங்கள் திட்டங்களுக்கும் மாத வாடகை சந்தை மதிப்பு இழப்பீடு 100 சதவிகித கருணைத்தொகை வழங்கிட வேண்டும். ஆனைமலை ஆறு நல்லாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் 

அமராவதி அணையைத் தூர்வார வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இச்சங்கத்தின் மூலம் வலியுறுத்தப்படுகிறது. 

தமிழக முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த இச்சங்கத்தினர் மனு வழங்கி வருகின்றனர். அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர், வேலு மந்தராச்சலம் தலைமையில் மனு வழங்கப்பட்டது. முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe