வெஜ் பிரியர்களுக்கான  அசத்தலான காளான் கிரேவி..!

published 1 year ago

வெஜ் பிரியர்களுக்கான  அசத்தலான காளான் கிரேவி..!

காலனில் பல சத்துக்கள் அடங்கியுள்ளன. காளானில் உள்ள கால்சியம் உங்கள் பற்களைப் பாதுகாக்கிறது. பசியைக் குறைக்கிறது. இதனால் எடை குறைப்பில் உதவுகிறது. முடி வளர உதவுகிறது. சருமத்திற்கு நன்மை தரும். நீரிழிவு நோய்க்கு மருந்தாகிறது. சுவைக்கு மட்டும் இன்றி மருத்துவ குணமும் நிறைந்த காலனை எப்படி சுவையாகச் செய்வது என்று பார்ப்போம்.

 தேவையான பொருட்கள்

மஸ்ரூம் - ஒரு கப் (நறுக்கியது)

சின்ன வெங்காயம் -  இரண்டு கைப்பிடி (ஒரு கைப்பிடி பொடியாக நறுக்கியது)

இஞ்சி - 1 இன்ச்

பூண்டு - 4 பல்

பட்டை - 2

கிராம்பு - 4

சோம்பு - கால் ஸ்பூன்

கசகசா - கால் ஸ்பூன்

தக்காளி-1

வர மிளகாய் - 1

வரக் கொத்த மல்லி - அரை ஸ்பூன்

தேங்காய்-அரை கப்

தேங்காய் -அரை கப்

உப்பு- தேவையான அளவு

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

கறிவேப்பிலை, மல்லி - சிறிதளவு

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய்யைச் சூடாக்கி, நறுக்காத சின்ன வெங்காயம் இரண்டு கைப்பிடியளவு எடுத்துச் சேர்க்க வேண்டும். அதனுடன் இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா, வரமிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

இந்த கலவை நன்றாக வதங்கியவுடன், அதில் துருவிய தேங்காயைச் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

இந்தக்கலவை நன்றாக ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

மற்றொரு கடாயில் எண்ணெய்யைச் சூடாக்கி பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிவைத்து மஸ்ரூம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

இதனுடன் ஏற்கனவே அரைத்து வைத்த விழுதுகளை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவேண்டும்.

மஸ்ரூமே தண்ணீர் அதிகம் உள்ளதுதான் எனவே எப்போது மஸ்ரூம் கிரேவி, பிரியாணி எதற்கு வேண்டுமானாலும் தண்ணீர் சேர்ப்பதைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

எண்ணெய் பிரிந்து வருவதுதான் பதம். நன்றாகக் கொதி வந்தவுடன், கொத்தமல்லித்தழை தூவி இறக்கிவிடவேண்டும்.

இந்த மஸ்ரூம் கிரேவி நான்வெஜ் சுவையிலேயே இருக்கும்.

இதை இட்லி, ஊத்தப்பம், தோசை, சப்பாத்தி, பூரி, சாதம் என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுச் சாப்பிடச் சுவை அள்ளும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe