தாளியூர் பகுதியில் யானைத்தாக்கி முதியவர் உயிரிழப்பு...

published 5 days ago

தாளியூர் பகுதியில் யானைத்தாக்கி முதியவர் உயிரிழப்பு...

கோவை: கோவை புறநகர் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டு உள்ள காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்த வனத் துறையினரும் குழுக்கள் அமைத்து ஊருக்குள் வராமல் விரட்டி வருகின்றனர். 

இந்நிலையில் தடாகத்தில் இருந்து துடியலூர் செல்லும் சாலையில் உள்ள தாளியூர் கிராமத்தில் நடை பயிற்சிக்குச் சென்ற நடராஜ் என்பவரை அங்கு வந்த ஒற்றைக் காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் தடாகம் காவல் துறையினர் மற்றும் கோவை சரக வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கு கூடிய அப்பகுதி பொதுமக்கள் அவரின் உடலை எடுக்க விடாமல் தற்பொழுது போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், ஆக்ரோசமாக சுற்றி தெரியும் அந்த ஒற்றை காட்டு யானை தாக்கி உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்து வருவதால், அந்த ஒற்றைக் காட்டு  யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட வேண்டும் என வலியுறுத்தினர்.

தகவல் அறிந்து அங்கு வந்த அப்பகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, அங்கு உள்ள வனத் துறைரிடம் பேசினார். தொடர்ந்து இந்த யானையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பின்னர் கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டு யானை இடமாற்றம் செய்யப்படும் என்று உறுதி அளித்து அதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டு உடலை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe