திருநங்கையர் விருதுக்கு விண்ணப்பிக்க கோவை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு- விவரங்கள் இதோ...

published 1 day ago

திருநங்கையர் விருதுக்கு விண்ணப்பிக்க கோவை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு- விவரங்கள் இதோ...

கோவை: 2025 ஆம் ஆண்டு திருநங்கையர்களில் சிறப்பாக முன்னேறியவர்களில் ஒருவருக்கு முன்மாதிரி விருது. திருங்கையர் தினமான ஏப்ரல்-15 அன்று வழங்குவதற்கு தகுதியான திருநங்கையர்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும், இவ்விருதானது ரூ. 1,00,000/- காசோலை மற்றும் சான்று ஆகியவற்றை உள்ளடக்கியதாக உள்ளது.

2025- ஆண்டு திருநங்கையர் தினவிருது வழங்கும் பொருட்டு விண்ணப்பதாரர்களுக்கான தகுதிகள்

திருநங்கையர்கள் அரசு உதவிபெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும்.

குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும்.

திருநங்கையர் நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.

இவ்விருதிற்கு விண்ணப்பிக்கும் திருநங்கையர்கள் உரிய கருத்துருக்களுடன் www.awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பதிவு மேற்கொண்டு மாவட்டஆட்சியரக வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி உரிய வழிமுறைகளுடன் விருதிற்கான கருத்துருக்களை 21.02.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe