கோவையில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 20 அடி திருவள்ளுவர் சிலை தயார்..!

published 1 year ago

கோவையில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 20 அடி திருவள்ளுவர் சிலை தயார்..!

கோவை : தமிழ் எழுத்துக்கள் கொண்ட 20அடி உயரத் திருவள்ளுவர் சிலை அனைவரையும் கவரும் வண்ணம் அமைய உள்ளது.

கோவை மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் 7 குளங்கள் சீரமைக்கப்பட்டு குளக்கரைகளில் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்று உள்ளன. 

அதே போல் ரேஸ்கோர்ஸ், பகுதியிலும் பல்வேறு சிலைகள், வண்ண வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 

அதன் தொடர்ச்சியாகக் கோவை பொள்ளாச்சி சாலை குறிச்சி குளம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிச்சி குளத்தைச் சுற்றிலும் மின் விளக்குகள், நடைபாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. 

அதுமட்டுமின்றி தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில், ஜல்லிக்கட்டு விளையாட்டு சிலைகள், பாரம்பரிய நடனம், தமிழர் விழா பொங்கல், ஏர் உழும் வண்டிகள் ஆகியவற்றின் மாதிரி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாகக் குறிச்சி ரவுண்டானவின் மையத்தில் தமிழ் எழுத்துகளால் ஆன திருவள்ளுவர் சிலை அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது. 

இந்த திருவள்ளுவர் சிலை 2.50 டன் எடையில் 20 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. 

திருவள்ளுவர் சிலையின் நெற்றியில் அறம் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மாலை மற்றும் இரவு நேரங்களில் விளக்குகளால் ஜொலிக்கும் வண்ணம் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe