கோவை வக்கிர காளியம்மன் கோவில் ஆடி குண்ட திருவிழா

published 1 year ago

கோவை வக்கிர காளியம்மன் கோவில் ஆடி குண்ட திருவிழா

கோவை : கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி.புதூர் பிரிவில் ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 12-வது ஆடிக்குண்டம் திருவிழா வருகிற 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6 மணிக்குக் கணபதி ஹோமத்துடன் குண்டம் திருவிழா தொடங்குகிறது. 

அதனைத் தொடர்ந்து குண்டம் திருவிழாவுக்கான கொடியேற்றப்பட்டு, காப்புக் கட்டப்படுகிறது. 12-ந் தேதி(சனிக்கிழமை) காலை 5 மணிக்கு அஷ்டபுஜ காலபைரவ ஹோமமும், பக்தர்கள் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 13-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) குத்துவிளக்கு பூஜையும், 14-ந் தேதி(திங்கட்கிழமை) திருவாபரணம் திருசீர்வரிசை கொண்டு வருதல், திருக்கல்யாண நிகழ்ச்சி மற்றும் குண்டம் பற்ற வைத்த நிகழ்ச்சியும் நடக்கிறது. 

விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா வருகிற 15-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அன்று காலை 6 மணிக்குக் கரகம், பூவோடு, பால்குடம் எடுத்து வீதியில் ஊர்வலம் வர இருக்கிறது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe