குழந்தைகளும் தடுப்பூசி போடலாம் : கோவையில் நாளை மெகா தடுப்பூசி முகாம்..! முழு விவரம்

published 2 years ago

குழந்தைகளும் தடுப்பூசி போடலாம் : கோவையில் நாளை மெகா தடுப்பூசி முகாம்..! முழு விவரம்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/FePOfH8LTBKE40nzrfPpnD

கோவை: கோவையில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக மாநகராட்சி  நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி  நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு :

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ஞாயிற்றுக்கிழமை (12.06.2022) அன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் கோவிட்19 மாபெரும் தடுப்பூசி முகாம்களுக்கு வார்டு ஒன்றிற்கு 9 பூத்கள் வீதம் 900 பூத்கள் மற்றும் 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் சேர்த்து மொத்தம் 50 மொபைல் பூத்கள் என மொத்தம் 950 தேர்வு செய்யப்பட்டு கோவிட் தடுப்பூசி போடுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இதுநாள் வரை 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 100 சதவீதம் மேல் தாண்டியுள்ளனர். இரண்டாம் தவணை தடுப்பூசி இன்று 8 சதவீதம் பேர் போட வேண்டியவர்கள் உள்ளனர். கோவின் வலைதளத்தில் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியவர்களின் பட்டியல் தரவிறக்கம் செய்து ஒவ்வொரு தனிநபருக்கும் அலைப்பேசியின் மூலமாக இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் 12 வயது முதல் 14 வயது 15 வயது முதல் 18 வயதுடைய குழந்தைகளில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடவேண்டியவர்கள் நடைபெறும் “மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களில்” சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

மேலும் சுகாதாரப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் உள்ளிட்ட முன்நிலை பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் பூஸ்டர் தடுப்பூசி போடாதவர்கள் அனைவரும் முகாம்களை அணுகி பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். 

இது தவிர தடுப்பூசி போட்டுக்கொள்ள தவறியவர்கள்  அவர்கள் வசிக்கும் பகுதியிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இதில் பொது மக்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் கலந்துகொண்டு கோவிட் தடுப்பூசியை தவறாமல் போட்டுக்கொண்டு பயனடைவதுடன் கோயம்புத்தூர் மாநகராட்சியை கோவிட் தொற்று தடுப்பின் முன்மாதிரி மாநகரமாக மாற்றிட மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் கேட்டுக்கொள்கிறார்கள்.

இவ்வாறு கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe