கோவையில் சுதந்திர தின விழாவிற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு

published 1 year ago

கோவையில் சுதந்திர தின விழாவிற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு

கோவை : நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கோவை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். ரயில் நிலையத்தில் தீவிர சோதனைக்குப் பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

நாட்டின் 76வது சுதந்திர தின விழா நாளை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நாளை காலை 9.05 மணிக்கு, வஉசி மைதானத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். அதைத்தொடர்ந்து, பல்வேறு துறைகளின் சார்பில், சிறப்பாகச் செயல்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்குப் பாராட்டு சான்றிதழ்களும், காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்குப் பதக்கங்களையும் மாவட்ட கலெக்டர் வழங்க உள்ளார். இந்நிலையில், காவல்துறையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சிக்கான ஒத்திகை வஉசி மைதானத்தில் நடந்து வருகிறது. இதனை இன்று கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் நேரில் பார்வையிட்டார். நாளை நடைபெற உள்ள காவல்துறை அணிவகுப்பில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்கின்றனர். மேலும் கோவை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

இதில், குறிப்பாகப் பேருந்து நிலையம், ரயில் நிலைய பகுதிகள், விமான நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பைத் தீவிரப்படுத்த உள்ளனர். ரயில் நிலையத்தில் பயணிகள் அமரும் இடம், நடைமேடை, ரயில் பெட்டிகளில் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை செய்யப்படுகிறது. பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பின் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்கக் காவல் துறை சார்பில், அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe