கோவையில் 'பிளாக் ஸ்பாட்'களில் 850 பேரிகார்டுகளை அமைக்கிறது காவல்துறை

published 1 year ago

கோவையில் 'பிளாக் ஸ்பாட்'களில் 850 பேரிகார்டுகளை அமைக்கிறது காவல்துறை

கோவை : விபத்து நடக்கும் பிளாக் ஸ்பாட்களில், 850 பேரிகார்டுகள் வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி., பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது;–

கோவை மாவட்ட காவல்துறையின் தீவிர நடவடிக்கையால் விபத்துக்கள் வெகுவாக குறைந்து உள்ளது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில், 11 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளது. விபத்து அடிக்கடி நடக்கும் இடத்தை பிளாக் ஸ்பாட்களாக கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு கண்டறியப்பட்ட, 83 இடங்களில் பேரிகார்டு வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில், 850 பேரிகார்டுகள் வைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

 சூலுார் பகுதியில் பைபாஸ் ரோட்டை கண்காணிக்கும் வகையில், 300 இடங்களில் சி.சி.டி.வி., கேமிரா அமைக்கப்பட உள்ளது. பைபாஸ் ரோடு, சிந்தாமணி புதுார், நீலம்பூர் போன்ற முக்கிய பகுதிகளைத் தீவிரமாக கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மதுக்கரை பகுதியில் வாளையார் வரையில் வாகனங்கள் கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது. ரோந்து வாகனங்களிலும் விரைவில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட உள்ளது. 

மேலும் சூலுாரில் கட்டுப்பாட்டு அறை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை போன்ற குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் அதிகளவு நகை, பணம் மீட்கப்பட்டுள்ளது.

சைபர் கிரைம் சைபர் குற்றத்தில், 29 வழக்குகள் பதிவாகியுள்ளது. அதனை காவல்துறை தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நடப்பாண்டில், 12 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. 1.15 கோடி ரூபாய் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சைபர் கிரைம் மோசடியில் பணத்தை இழந்தவர்களில் ஐ.டி., ஊழியர்களே அதிகம். ஐ.டி., நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் ஆன்லைனில் பகுதி நேர வேலை, அதிகப் பணம் பெற விரும்பி பணத்தை இழந்து விடுகிறார்கள். வங்கியில் பணியாற்றும் ஒருவர் தனது மொபைல் போனில் வந்த ஒ.டி.பி., விவரங்களைக் கூறி மர்ம நபரிடம் பணத்தை இழந்துள்ளார். சைபர் கிரைம் மோசடி குறித்து பல்வேறு  விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe