"மொபைல் போன் இல்லைன்னா என்ன பன்னுவீங்க..?" : NewsClouds கேள்விகளுக்கு கோவை மாணவர்கள் கொடுத்த பதில்கள்..!

published 1 year ago

"மொபைல் போன் இல்லைன்னா என்ன பன்னுவீங்க..?" : NewsClouds கேள்விகளுக்கு கோவை மாணவர்கள் கொடுத்த பதில்கள்..!

கோவை : மொபைல் போனும் ஊறுகாய் போல யாராலும் அது இல்லாமல் சாப்பிட முடியாது என்ற நிலைமையில் இன்றைய காலகட்டம் ஓடி கொண்டு இருக்கிறது. இந்த மொபைலில் இளைஞர்கள் பலரும் மூழ்கிக் கிடக்கின்றனர். இதனால் உள்ளங்கையில் உலகம் இருப்பதாக எண்ணி, இந்த உலகத்தை விட்டு நம்மை தனியே பிரித்து விடுகிறது இந்த மொபைல் போன். அது மட்டும் இல்ல்லாமல் வெளி உலக தொடர்பு குறைவதாகவும், சிந்திக்கும் திறனை இழக்கும் அபாயம் இருப்பதாகவும் மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கின்றன.

ஆனாலும், மொபைல் போன்கள் இல்லாமல் எந்த ஒரு வேலையும் இல்லை என்ற அளவுக்கு இந்த மொபைல் நம் வாழ்வில் இன்றியமையாத ஒரு பொருளாக இடம்பிடித்துவிட்டது. "எந்த நேரமும் மொபைல் போனில் அப்படி என்ன இருக்கு?" என்று இன்றும் விளாசும் தாய்மார்களிடம் கூறாத பதில்களை மாணவர்கள் போட்டு உடைத்துள்ளனர்.

கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர்களிடையே மொபைல் போன் எதற்காக பயன்படுத்துகிறீர்கள்? அதுல அப்படி என்ன பார்க்கிறீர்கள்? எவ்வளவு நேரம் மொபைல் போன் பயன்படுத்தாமல் உங்களால் இருக்க முடியும்? மொபைல் போனை உங்களிடம் இருந்து வாங்கிவிட்டால் என்ன செய்வீர்கள்? என்று கேள்விக்கணைகளைத் தொடுத்தோம்.

அதற்கு மாணவ-மாணவிகள் கூறுகையில், "இப்போது உள்ள காலத்தில் மொபைல் என்பது எல்லாவகையிலும் முக்கியமானதாக உள்ளது. அந்த காலத்தில் மொபைல் பயன்பாட்டில் இல்லை அதனால் பிறர் முகம் பார்த்து பேசும் வழக்கம் இருந்தது. இப்போது அது வெகுவாக குறைந்துவிட்டது. இப்போதெல்லாம் யாரிடம் பேச வேண்டும் என்றாலும் உடனே மொபைல் எடுத்து 'சேட்' செய்வதே எங்களுக்கு நேரில் பேசுவதை விட மிகவும் வசதியாக உள்ளது.

காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை மொபைல் தான் உலகம் என நாட்கள் ஓடி கொண்டு இருக்கிறது .குளியல் போடும் நேரத்தை தவிர மற்ற அனைத்து நேரத்திலும் மொபைல் போன் எங்களிடம் இருக்கும். மொபைல் இல்லாமல் வாழவே முடியாது என்ற நிலையில் உள்ளோம். எங்களுக்கு இது பிடித்திருக்கிறது." என்றனர்.

மொபைல்  போன் தொலைந்து விட்டால் இந்த காலத்தில் எளிதில் கண்டறியலாம். ஆனால் நாமே அதில் தொலைந்து விட்டோம் என்பது அசைக்க முடியாத உண்மை.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe