World Photography day 2023 | நம்ம கோவையின் கொஞ்சம் வரலாறு.. நெறையா போட்டோஸ்.. மிஸ் பன்னாம பார்த்து ரசிக்கலாம் வாங்க.!

published 1 year ago

World Photography day 2023 |  நம்ம கோவையின் கொஞ்சம் வரலாறு.. நெறையா போட்டோஸ்.. மிஸ் பன்னாம பார்த்து ரசிக்கலாம் வாங்க.!

கோவை: கடந்த 1992-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம் தான் நம்ம கோவையை  நிர்வகிக்கும் அதிகாரிகள் வீற்றிருக்கும் இடம். கோவை மாநகராட்சி ஆணையாளர் இங்கிருந்து தான் நம் மாநகராட்சியின் நிர்வாகத்தை கவனித்துக் கொள்கிறார். இந்த மாநகராட்சி கட்டிடத்தின் அருகில் தான் விக்டோரியா ஹால் அமைந்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் விக்டோரியா ஹால் என்று அழைக்கப்பட்ட இந்த இடம் நாள்பட டவுன்ஹால் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

கோவையின் மிக முக்கிய போக்குவரத்து அம்சங்களில் ரயில் சேவை பிரதானமான ஒன்று. தமிழகத்திலேயே ரயில்வே நிர்வாகத்திற்கு அதிக வருவாய் ஈட்டிக் கொடுக்கும் ரயில் நிலையம் தான் நம்ம கோவை ஜங்க்ஷன். கோவையில் உள்ள மத்திய ரயில் நிலையம், வடகோவை ரயில் நிலையம் மற்றும் போத்தனூர் ரயில் நிலையம் ஆகிய 3 பெரிய ரயில் நிலையங்களின் தலைவர் தான் இந்த கோவை சிட்டி ஜங்க்ஷன்.

பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், ஊட்டி என கோவையைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் பயிரிடப்படும் அழகிய வண்ண மலர்களை வாங்க நாம் செல்லும் இடம் தான் இந்த பூ மார்க்கெட். உள்ளூர் மட்டும் இல்லைங்க.. இந்த மார்க்கெட்டுக்கு வெளி மாவட்டங்கள்.. வெளி மாநிலங்கள்.. ஏன்? வெளி நாடுகளில் இருந்தும் பூக்கள் வருகின்றன. இங்கிருந்து பூக்கள் கேரளா உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்படுகின்றன.

நம்ம கோவையின் காவல் தெய்வம் என்று பக்தர்களால் பெருமையோடு அழைக்கப்படுபவர் கோனியம்மன். அருள்மிகு கோனியம்மன் கோவில் நொய்யல் ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க இந்து கோவில். இந்த கோவிலின் முக்கிய தெய்வமாக பார்வதியின் வடிவமான கோனியம்மன் அருள்பாலிக்கிறார். இந்த கோவையில் கோயம்புத்தூர் நகரின் மையப்பகுதியான, டவுன்ஹாலில் அமைந்துள்ளது.

ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் தேரோட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையே விட வேண்டும், அவ்வளவு கூட்டம் வரும். கோவை மக்கள் பரவசத்தோடு தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். ஆனால் நமது மாவட்ட நிர்வாகத்திற்கு என்ன கவலையோ..? 'லீவ்' விட மாட்டேங்குறாள்..!

கோவையின் மையப் பகுதியான டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ளது இந்த மணிக்கூண்டு. இந்த மணிக்கூண்டு அமைக்கப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதில் உள்ள மணி லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டிடம் கோவையில் ஏற்பட்ட ஒரு நில நடுக்கத்தையும் கடந்து கம்பீரமாக நிற்கிறது. பல நாட்களாக பாழடைந்து கிடந்த இந்த மணிக்கூண்டுக்கு ‘கிரடாய்’ என்ற நிறுவனம் புதுப்பொலிவு கொடுத்திருக்கிறது. இந்த  நேரத்தில் அந்த நிறுவனத்தாருக்கு ஒரு நன்றி சொல்லிக்கலாம்.

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கோயம்புத்தூரின் மேற்குப் பகுதியில் உள்ள பேரூரில் அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்து ஒரு கோவில் இது. கடந்த 2-ஆம் நூற்றாண்டில் கரிகால சோழனால் கட்டப்பட்டது இந்த கோவில். தஞ்சை பெருவுடையார் கோவிலைப்போலவே இந்த கோவிலும் பெருமைக்கும், வரலாற்றுக்கும் சிறப்பு மிக்க கோவில். இங்குள்ள படித்துறையில் வருடா வருடம் கார்த்திகை தீப திருநாளில் விளக்கு ஏற்றி வழிபடுவார்கள் பொதுமக்கள். ஆஹா.. எம்புட்டு அழகா இருக்கும் தெரியுமா..!

முக்கியமான ஒரு ஸ்பாட்-ஐ சொல்ல மறந்துட்டோம் பாத்தீங்களா..! நம்ம தமிழ் கடவுள் 'லார்ட்' முருகனின் ஏழாவது படை வீடு என்று அழைக்கப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் தான் நம்ம மருதமலை முருகன் கோயில். இந்த மலைக் கோவில் கடந்த 12-ஆம் நூற்றாண்டின் பிரபலமான மலைக் கோவிலாகும். தைப்பூசம், கிருத்திகை வழிபாடு என முருகனுக்கு உகந்த நாட்களில் நம்ம 7ம் படைவீடு மற்ற 6 படை வீடுகளுக்குமே 'டஃப்' கொடுக்கும். "மருதமலைக்கு  நீங்க வந்து பாருங்க.. தீராத பிரச்சனை எல்லாம் தீந்து போகும்ங்க"ன்னு பாட்டு பாடுற அளவுக்கு  நம்ம மக்களுக்கு இந்த கோவில் மேல நம்பிக்கை இருக்குனா பாத்துகோங்க.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 1868-ஆம் ஆண்டு சென்னை, சைதாப்பேட்டையில் நிறுவப்பட்டு பின்னர் 1906-ஆம் ஆண்டு கோயம்புத்தூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. தமிழகத்தின் கல்வித் தலை நகரமாக விளங்கும் கோவையின் முக்கிய அடையாளங்களில் இதுவும் ஒன்று. 10 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு அமைந்துள்ள பொட்டானிக்கள் கார்டன் இளசுகளுக்கு ஏற்ற இடமாக இருந்து வந்தது. "இப்போ ரொம்ப 'ஸ்ட்ரிக்ட்' பன்றாங்கப்பா" அப்டின்னு ச்சு கொட்டுறாங்க 20's கிட்ஸ்.

எல்லாத்தையும் சொல்லிட்டு கோவை-யோட டாப் டக்கர் ஸ்பாட்-அ சொல்லாம இருக்க முடியுமா…! அருவியில் குளித்து ஆட்டம்போட, வனப்பகுதிக்குள் குட்டி நடை போட ஏற்ற இடம் தான் நம்ம கோவை குற்றாலம். மேற்குத்தொடர்ச்சி மலை முகடுகளுக்கு இடையே நம்ம மக்களை குளிர்விக்கவே இயற்கை கொடுத்த வரம் தான் இந்த கோவை குற்றாலம். மழை வரும்போதெல்லாம் இந்த அருவியில் கட்டுகடங்காமல் வெள்ளம் ஏற்படும். அப்போ எல்லாம் நம்ம கோவை குற்றாலத்திற்கு 'லீவ்' விட்ருவாங்க.. அதனால மழைக்காலத்தில் முழுசா விசாரிச்சுட்டு இந்த ஸ்பாட்டுக்கு போலாம்.

கொஞ்சம் வரலாறு.. நெறையா போட்டோஸ் நீங்க பார்த்தாச்சு தானே.. அப்டியே நம்ம ஊர் காரங்களுக்கும், முக்கியமா வெளியூர் காரங்களுக்கும் ஷேர் பன்னுங்க…

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe