கோவையில் நாட்டுக்கோழி விற்பனையில் தூள் கிளப்பும் கம்ப்யூட்டர் இன்ஜினியர்

published 1 year ago

கோவையில் நாட்டுக்கோழி விற்பனையில் தூள் கிளப்பும் கம்ப்யூட்டர் இன்ஜினியர்

கோவை  : கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர்  கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்துள்ளார். 
இவருக்கு  கால்நடை வளர்ப்பில் ஆர்வம் இருப்பதால்  நாட்டுக்கோழி விற்பனையில்  இறங்கிவிட்டார். ஆரம்ப காலத்தில் இவரது பெற்றோர் இதை எதிர்த்துள்ளனர். ஆனாலும் நாட்டுக்கோழி விற்பனையை மேற்கொண்டு அதில் அதிகம் சம்பாதித்துள்ளார்.

இதுகுறித்து  கிருஷ்ணகுமார்  நம்மிடம் கூறியதாவது:

கடகநாத், நாட்டுக்கோழி, முயல், வாத்து,  போன்றவைகளும் விற்பனை செய்கிறேன். அன்னூரில் இருந்து பைக்கில் சென்று சத்தியமங்கலம், ஊட்டி, கோவை நகர் பகுதிகள் என பல்வேறு இடங்களுக்கு சென்று விற்பனை செய்வேன்.  மாதம் ரூ.30 ஆயிரம் சம்பாதிப்பேன். இத்தொழிலில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. மனதிற்கு பிடித்து தான் இந்த வேலை செய்கிறேன்.  மக்களிடையே ஏற்பட்டுள்ள  நாட்டுக்கோழி விற்பனை ஜோரா நடக்குது. இவ்வாறு அவர் கூறினார்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe