சுதேசி பொருட்கள் விற்பனையில் ரூ.12 கோடி வருவாய் ஈட்டிய தென்னக ரயில்வே

published 1 year ago

சுதேசி பொருட்கள் விற்பனையில் ரூ.12 கோடி வருவாய் ஈட்டிய தென்னக ரயில்வே

கோவை: தெற்கு ரயில்வே சார்பில்  'உள்ளூர்களுக்கான குரல்' என்னும் திட்டத்தின் கீழ் சுதேசி பொருட்கள் விற்பனையை ஊக்குவிக்க  'ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு' விற்பனை ஸ்டால்கள், தற்போது 160 ரயில் நிலையங்களில் செயல்பட்டு வருகின்றன.

இந்த ஸ்டால்களில் 940 வகை சுதேசி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.   உள்ளூரில் தயாரிக்கப்பட்ட தனித்துவமான பொருட்களின் வகைகள் காட்சிப்படுத்தி விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் உள்ளூர் கைவினை கலைஞர்கள், நெசவாளர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கின்றன.

தெற்கு ரயில்வேயில் இந்த ஸ்டால்கள் அமைக்க தற்போது 423 ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன . தற்போது செயல்படும் ஸ்டால்களில், டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காஞ்சிபுரம் பட்டுப் புடவை விற்பனை படு ஜோராக நடந்துள்ளது. இந்த ஸ்டாலில் இதுவரை அதிகபட்சமாக ரூ. 2.05 கோடி வரை  வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மதுரையில், சுங்குடி சேலை  விற்பனை ஸ்டாலில் ரூ.81.18 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதுபோல் 160 ஸ்டால்களில் சுமார் ரூ.12.03 கோடி வரை வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe