கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் நடைபெற்ற சிறப்பு தொழிற்கடன் முகாம்.

published 1 year ago

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் நடைபெற்ற சிறப்பு தொழிற்கடன் முகாம்.

கோவை  : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் சிறப்பு தொழிற்கடன் முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் 12 தொழில் முதலீட்டாளர்களிடமிருந்து 20 கோடி கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்டார்.

இம்முகாமில் தொழில் மைய பொது மேலாளர் திருமுருகன், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மண்டல மேலாளர் பேபி, கோவை கிளை மேலாளர் கீதா, கொடிசியா தலைவர் திருஞானம், முன்னாள் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் / நிதி ஆலோசகர் வணங்காமுடி, உட்பட பல்வேறு தொழில் முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய மாவட்ட ஆட்சியர்,
இந்த கழகம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டங்களின் கீழ் கடன் உதவி வழங்கி வருகிறது.
இக்கழகமானது தமிழ்நாடு அரசின் மானியத் திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் மானியத் திட்டங்களை துரிதமாக செயல்படுத்தி வருகின்றது.

இக்கழகமானது தனது சிறப்பு தொழில் கடன் விழாவினை ஆகஸ்ட் 21- ம் தேதி தொடங்கி செப்டம்பர் 1-ம் தேதி வரை நடத்தி வரும் நிலையில், இதன் மூலமாக அனைத்து விதமான தொழில் கடன்களும் வழங்கப்படும். மேலும் தகுதிபெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியத்துடன் (அதிகபட்சம் ரூ.1.50 கோடி வரை மானியம்) நிதி உதவி வழங்கப்படுகிறது. முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும்.

அதுமட்டுமின்றி புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம் (NEED) மூலம் 5 முதல் 10சதவிகிதம் முதலீடு செய்யும்தொழில்களுக்கு 25சதவிகிதம் மானியமாகவும், 70 சதவிகிதம் கடனுதவியும் வழங்கப்படுவதுடன் 3 சதவிகிதம் வட்டியில் தள்ளுபடியும் வழங்கப்படுகின்றது,

அதுபோலவே, அண்ணல் அம்பேத்கார் சேம்பியன்ஸ் திட்டம் (AABCS} மூலதனமின்றி வழங்கப்படும் 65சதவிகித கடனுதவியில் 35சதவிகிதம் மானியமும், செதவிகிதம் வட்டியிலும் தள்ளுபடி வழங்கப்படுகின்றது. இதுபோல் இயந்திர மூலதனக்கடன், விரைவுக் கடன், மருத்துவர் திட்டம், Corporate கடன் திட்டம், கழகத்தின் முக்கிய வாடிக்கையாளர் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் மானியங்களும் வட்டியில் தள்ளுபடிகளும் வழங்கப்படுகின்றது, இந்த வாய்ப்பை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர், புதிய தொழில் முதலீட்டாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe