கோவையில் 2-வது நாளாக சப்-இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வு 1237 பேர் எழுதினர்

published 1 year ago

கோவையில் 2-வது நாளாக சப்-இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வு 1237 பேர் எழுதினர்

கோவை : கோவையில் 2-வது நாளாக சப்-இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது. இந்த தேர்வை 1237 பேர் எழுதினர்.
 

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் கோவை மாவட்டத்தில் 2023-ம் ஆண்டிற்கான நேரடி எஸ். ஐ., (துறை ஒதுக்கீடு) எழுத்து தேர்வு இன்று கோவை பி.எஸ்.ஜி., கலை கல்லூரி தேர்வு மையத்தில் நடைபெற்றது. 

இதில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு 1,338 ஆண்கள் மற்றும் 280 பெண்கள் உட்பட மொத்தம் 1618 நபர்கள் விண்ணப்பித்தனர். 1237 நபர்கள் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். 381 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையத்தை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மற்றும் கோவை மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் மேற்பார்வையிட்டனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe