கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

published 1 year ago

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தினர் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் ராஜா தேவகாந்த் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சேசு ராஜா, பொருளாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
 

அரசு பள்ளிகளில் 12,200 பகுதி நேர ஆசிரியர்கள் முறையான நியமனத்தில் மாணவர்களின் பன்முக திறமைகளை மேம்படுத்தும் விதமாக உடற்கல்வி, கணினி, தையல், இசை, ஓவியம், தோட்டக்கலை, கட்டிடக்கலை மற்றும் வாழ்வியல் திறன் ஆகிய பாடப்பிரிவுகளில் பத்தாயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகிறோம். பணி நிரந்தரபடுத்த கோரி கடந்த 13 ஆண்டுகளாக  பலமுறை கோரிக்கை விடுத்து போராடி வருகிறோம். 

எனவே எங்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து அனைத்து வேலை நாட்களிலும் முழு நேர பணி மற்றும் மாத ஊதியம் 28 ஆயிரம் ரூபாய் அறிவிக்க வேண்டும். காலதாமதம் ஏற்படும் நிலையில் 21- 9-23-ம் தேதி முதல் சென்னை டிபிஐ வளாகத்தில் தீர்வு கிடைக்கும் வரையில் 12,200 பகுதி நேர ஆசிரியர்களுடன் காத்திருப்பு போராட்டம் நடைபெறும். 

ஆனால் அதற்கு முன்பாக எங்களது கோரிக்கைகளுக்கு அரசின் மூலம் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe