பிரக்யானந்தா வெற்றியை கொண்டாடும் இந்தியா.. வெள்ளியில் உருவம் தயாரித்த தன்னாவலர்..!

published 1 year ago

பிரக்யானந்தா வெற்றியை கொண்டாடும் இந்தியா.. வெள்ளியில் உருவம் தயாரித்த தன்னாவலர்..!

இந்தியா  : உலக கோப்பை செஸ் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற இளம் வீரர் பிரக்யானந்தா.

இன்று பிரக்யானந்தா குறித்து தெரியாதவர்கள் யாரும்  இருக்க முடியாது என்று கூறும் அளவுக்கு புகழ்பெற்றுள்ளார் இந்த இளைஞர்.

உலகக்கோப்பை செஸ் போட்டியுல் உலகின் முன்னணி செஸ் வீரரான மெக்னஸ் கால்சனுடன் மோதிய பிரக்யானந்தா அவருக்கு மிகுந்த போட்டியை ஏற்படுத்தினார்.

இறுதியாக உலகக்கோப்பை செஸ்போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

வெள்ளிப்பதக்கத்தை வென்ற இந்த இளைஞரின் வெற்றியை இந்தியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வெற்றியாக கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே பிரக்யானந்தாவின் வெற்றியை கொண்டாடும் விதமாக கோவையை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் வெள்ளியில் இந்திய வரைபடத்துடன் கூடிய செஸ் காயினை செய்துக்கியுள்ளார்

குனியமுத்தூரை சேர்ந்தவர் 'உன்னால் முடியும் தம்பி' ராஜா. வித்தியாசமான பொருட்களை தயாரிப்பதோடு, இந்தியர்கள் வெவ்வேறு போட்டிகளில் வெற்றி பெறும்போதும், இந்தியர்களின் பண்டிகையின் போதும் அது சார்ந்த பொருட்களை வித்தியாசமான முறையில் தயாரிப்பவர்.

சமீபத்தில் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக, விக்ரம் லேண்டர் விநாயகர் கையில் இருப்பது போன்ற உருவத்தை உருவாக்கி பாராட்டுகளை பெற்றார்.

இவன்கிழையே பிரத்தியானந்தா இந்தியாவிற்கு வெள்ளிப்பதக்கத்தை வென்று கொடுத்த வெற்றியை கொண்டாடும் விதமாக இரண்டு கிராம் வெள்ளியில் இந்திய வரைபடத்துடன் செஸ் காயினை செதுக்கி வடிவமைத்துள்ளார்.

இந்த உருவத்தில் இந்தியாவே தனது கைகளில் வெற்றி சின்னத்தை காட்டுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை ஒரு மணி நேரத்தில் தயாரித்துள்ளதாகவும், இதனை பிரக்யானந்தாவுக்கு சமர்பிப்பதாகவும் யு.எம்.டி.ராஜா தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe