கோவையில் மடியேந்தி போராட்டம் நடத்திய பெண்கள்

published 1 year ago

கோவையில் மடியேந்தி போராட்டம் நடத்திய பெண்கள்

கோவை: சத்துணவு ஊழியர் ஒரு தலைப்பட்சமாக பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், அரசாணை எண் 163 பதவி உயர்வு வழங்க வேண்டும் , கணக்கு அலுவலரின் ஊழியர் விரோத போக்கை கைவிட கோரி, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரிடம் மடியேந்தும் போராட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு புதன்கிழமை மாலை நடைபெற்றது.

சத்துணவு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான காலை சிற்றுண்டி  திட்டத்தை ஊழியர்களிடமே வழங்க வேண்டும், ஆய்வு என்ற பெயரில் ஒரு நாள் விசாரனை செய்துவிட்டு மொத்த கணக்கில் தவறு சொல்வது, எஸ்.எஸ்.குளம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வடக்கு ஒன்றியங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஜிபிஎப் தொகை உடனடியாக வழங்க வேண்டும். 

 ஓய்வூதியம் 7850 வழங்க வேண்டும் மற்றும் விசாரணை என்ற பெயரில் ஒரு தலைப்பட்சமாக பழிவாங்கப்பட்ட மாவட்ட பொருளாளர் பி.சுதா  மற்றும் எஸ் எஸ் குளம் ஒன்றிய தலைவர் சுசீலா அவர்களுக்கு அரசு நிர்ணயத்தில் உள்ள கால அளவுக்கு பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி  நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பெண் சத்துணவு ஊழியர்கள் சாலையில் அமர்ந்து மடியேந்தி போராட்டத்திற்கு ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சத்துணவு ஊழியர் சங்க கோவை மாவட்ட தலைவர் கே.என்.ராமசாமி  தலைமை தாங்கினார். முன்னாள்  மாநில தலைவர் கே. பழனிசாமி துவக்கிவைத்து பேசினார்.

கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் என்.பழனிசாமி,  மாநில துணை பொதுச் செயலாளர் எம்.சீனிவாசன்,  ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

போராட்டத்தினை வாழ்த்தி வருவாய் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வி.செந்தில் குமார், அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் எஸ். ஜெகநாதன், தொழில்  பயிற்சி அலுவலர் சங்க கே நடராஜன் மாநில பொதுச் செயலாளர் ஆர் ரவி நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஆர் மாலதி ராணி ஆகியோர் வாழ்த்து பேசினர் நிறைவாக மாநில பொதுச் செயலாளர் ஏ மலர்விழி கண்டன உரை நிகழ்த்தினார் ஆர்ப்பாட்டத்தில் 300 க்கு மேற்பட்ட   அப்புறம் ஊழியர்கள் பங்கேற்றனர்.

நிறைவாக மாவட்ட பொருளாளர் பி சுதா நன்றி கூறினார்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe