கோவையில் 11-வது ஆசிய ஜவுளி மாநாடு மற்றும் சைமா 90-ம் ஆண்டு விழா -இணை அமைச்சர் பேச்சு

published 1 year ago

கோவையில் 11-வது ஆசிய ஜவுளி மாநாடு மற்றும் சைமா 90-ம் ஆண்டு விழா -இணை அமைச்சர் பேச்சு

கோவை: கோவை அவினாசி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் 11-வது ஆசிய ஜவுளி மாநாடு மற்றும் சைமா 90-ம் ஆண்டு விழா இன்று துவங்கியது. இந்த மாநாட்டில் ஒன்றிய ஜவுளித்துறை மற்றும் ரயில்வே துறை மத்திய இணை அமைச்சர் தர்ஷணா விக்ரம் ஜர்தோஷ் பங்கேற்று பேசியதாவது: ஜவுளித்துறையை ஆராய்ச்சி மூலம் தரம், நிலைப்பு தன்மையை மேம்படுத்த முடியும். ஜவுளித்துறை இந்திய பொருளாதாரத்தில் 8 சதவீதம் ஏற்றுமதி செய்கிறது.10 கோடி மக்கள் நேரடியாகவும் மறைமுகமாவும் பயன் அடைந்து வருகின்றனர்

மூலப்பொருள் விலையில் ஏற்றம் இறக்கங்கள் உள்ளது. இது உலக அளவில் சவால் நிறைந்த சூழலை ஏற்படுத்தி உள்ளது. எனவே, ஜவுளித்துறையில் உள்ள அனைவரும் இணைந்து செயற்படுவதன் மூலம் ஜவுளித்துறையை முன்னேற்ற‌ முடியும். மேலும், அரசு பி.எல்.ஐ திட்டம், பி.எம் மித்ரா பார்க் போன்ற பல்வேறு திட்டங்களை வழங்கி ஜவுளித்துறை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும், துறை சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளை இதுபோன்ற கருத்தரங்கு நடத்தி தீர்வுக்கான ஆலோசனை செய்வதன் மூலம் முழு தீர்வை காண முடியும். அடுத்த 10 ஆண்டுகளில் ஜவுளித்துறை முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த இரண்டு மாநாட்டில் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், தமிழக வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துசாமி, உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதில், ஜவுளி துறை தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஜவுளி துறை சார்ந்த கூட்டமைப்புகளுடன் கலந்துரையாடல் நடக்கிறது.

இது குறித்து அகில இந்திய ஜவுளி கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார் கூறியதாவது: இந்த மாநாடு இன்று, நாளை என இரண்டு நாள் நடக்கிறது. இந்த அகில இந்திய ஜவுளி மாநாட்டை ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயல் துவக்கி வைக்கிறார். இதில், மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் பங்கேற்ற உள்ளனர். 

இந்த மாநாட்டில் ஜவுளி தொழில் நிலவும் மந்த நிலை எப்படி கடந்து செல்வது குறித்தும், புதிய கண்டுபிடிப்புகள், ஜவுளித் துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. மாநாட்டில் சுமார், 500 மேற்பட்ட ஜவுளி துறையினர் பங்கேற்றனர். இதில், ஸ்பின்னிங் துறை, கைத்தறி உள்ளிட்ட அனைத்து துறைகள் பங்கேற்றுள்ளனர். ஜவுளித்துறைக்கு கொள்கைகள் வகுக்கும் கூட்டம் ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் தலைமையில் நடக்க உள்ளது. இந்த கூட்டம் தமிழகத்தில் நடப்பது இதுவே முதல் முறையாகும்.‌ 

மாநாட்டில் எங்கள் சார்பில் மூன்று கோரிக்கை வைக்க உள்ளோம். அதன்படி, தற்போது ஜவுளி தொழிலில் உள்ள நெருக்கடியை கடந்து வருவதற்கு கொரோனா காலத்தில் அளிக்கப்பட்ட இசிஜிஎல்எஸ் என்ற நீண்ட நாள் கடன் திட்டத்தை இரண்டு ஆண்டுக்கு நீடித்து அளிக்க வேண்டும். அதாவது தற்போது 3 ஆண்டுகள் உள்ளதை 6 ஆண்டுகளாக மாற்றி தர வேண்டும். 

ஏற்கனவே, மாநில ஜவுளித்துறையை அமைச்சர் காந்தி தலைமையில், தமிழக முதல்வர் ஏற்பாட்டில் ஒன்றிய அரசிடம் இதற்கான கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை மீண்டும் முன்வைக்க உள்ளோம். மேலும், பருத்தி 32எம்.எம் அதிகமாக உள்ள பருத்தி இறக்குமதி வரியில் விலக்கு அளிக்க வேண்டும். கியுஎப்எஸ் திட்டம் முடிந்துவிட்டது. 

அதற்கு பதிலாக புரோடக்ட் லிங்க இன்சென்டிவ் என்ற திட்டத்தை ஹாம் டெக்ஸ்டைல்ஸ் தொழில், பின்னலாடை, சாயம் பதனிடும் தொழிலுக்கு கொண்டு வர உள்ளனர். அதனை விரைந்து கொண்டு வர வேண்டும் என முன்வைக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.‌

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe