கோவையில் குழந்தைகளுடன் பள்ளி வேனில் செல்லும் போது மட்டையான டிரைவர்..! - வீடியோ

published 1 year ago

கோவையில் குழந்தைகளுடன் பள்ளி வேனில் செல்லும் போது மட்டையான டிரைவர்..! - வீடியோ

கோவை: கோவைபுதூர் பகுதியில் தனியார்  பள்ளியில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் குழந்தைகளை அவர்களது பெற்றோர்கள் சிலர் பள்ளிக்கு அழைத்து வந்து விட்டு சென்று பின்னர் பள்ளி முடிந்தவுடன்  வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர். அதேபோல ஒரு சில குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளியின் வாகனத்தில் அனுப்பி வைப்பார்கள்.

அதன் அடிப்படையில் கோவை புதூரில் இருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு அப்பள்ளியின் ஒப்பந்த வாகனங்கள் சென்று குழந்தைகளை ஏற்றி வருகின்றன.  வடவள்ளியில் இருந்து பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த வேன் குருசாமி நகர் பகுதியில் நடுரோட்டில் நின்றது.

இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்த போது அந்த வேனை ஓட்டி வந்த டிரைவர் தூங்கி கொண்டு இருந்தார்.இது குறித்து விசாரித்த போது ,அந்த வேனை ஓட்டி வந்தவர் செந்தில் என்பதும் அவர்  மது போதையில்  வேனை ஓட்ட முடியாமல் தத்தளித்து  ஸ்டேரிங் மீது உறங்கியது தெரியவந்தது. 
இதுகுறித்து பொதுமக்கள் குழந்தைகளின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.பின்னர் இதுகுறித்து பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மாற்று வேன் ஏற்பாடு செய்யப்பட்டு 12 குழந்தைகள் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மது போதையில் வாகனத்தை ஓட்டி அலட்சியப்படுத்திய டிரைவர் செந்தில் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர்கள்  வடவள்ளி போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வேனை பறிமுதல் செய்து டிரைவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த செய்தியின் வீடியோவை காண லிங்க்-ஐ சொடுக்கவும்.. கோவை வீடியோ செய்திகளுக்கு எங்களது Youtube  சேனலை Subscribe செய்திடுவீர்… https://www.youtube.com/shorts/h9L70dN5EeU
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe