12 ராசிகளுக்குமான துல்லியமான ராசிபலன்

published 1 year ago

12 ராசிகளுக்குமான துல்லியமான ராசிபலன்

12 ராசிகளுக்குமான இன்றைய (13ம் தேதி ) ராசிபலன்

மேஷம்

கூட்டாளிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். புத்திரர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் அமையும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும்.  நண்பர்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும். பூர்வீக சொத்துக்களின் வழியில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். வரவுகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

அஸ்வினி : ஒற்றுமை உண்டாகும்.

பரணி : நெருக்கம் அதிகரிக்கும்.

கிருத்திகை : அனுகூலமான நாள்.
---------------------------------------

ரிஷபம்

உறவினர்களிடத்தில் பொறுமையைக் கடைபிடிக்கவும். கனிவான பேச்சுக்களின் மூலம் நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். போட்டித் தேர்வுகளில் பங்கேற்று பாராட்டுகளை பெறுவீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். புதிய மனை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஆசைகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : பொறுமை வேண்டும்.

ரோகிணி : பாராட்டுகள் கிடைக்கும்.

மிருகசீரிஷம் : முன்னேற்றம் ஏற்படும். 
---------------------------------------

மிதுனம்

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தந்தைவழி உறவினர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். கூட்டுத் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : காரிய அனுகூலமாகும்.

திருவாதிரை : ஒத்துழைப்பான நாள்.

புனர்பூசம் : தன்னம்பிக்கை மேம்படும்.
---------------------------------------

கடகம்

சாதுரியமான பேச்சுக்களின் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். தனவரவுகள் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சுயதொழில் புரிபவர்களுக்கு முதலீடுகள் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பொதுமக்கள் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் தொடர்புகளின் மூலம் ஆதாயம் மேம்படும். நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

பூசம் : முதலீடுகள் மேம்படும்.

ஆயில்யம் : ஆதாயம் உண்டாகும். 
---------------------------------------

சிம்மம்

சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். இடமாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானத்தை கடைபிடிக்கவும். பழமையான விஷயங்களின் மீது ஈடுபாடு ஏற்படும். வேலையாட்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். வியாபார முயற்சிகளில் நுட்பமான சிந்தனைகளின் மூலம் லாபம் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்

மகம் : எண்ணங்கள் மேம்படும்.

பூரம் : ஈடுபாடு ஏற்படும்.

உத்திரம் : லாபம் உண்டாகும். 
---------------------------------------

கன்னி

வெளியூர் பயணங்களில் சாதகமான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் மேம்படும். உடனிருப்பவர்களை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். எதிர்பாராத தனவரவுகள் மேம்படும். மனதிற்கு புதுவிதமான நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்படும். நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல் உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் தொடர்பும், ஆதரவும் கிடைக்கும். செல்வாக்கு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

உத்திரம் : சாதகமான நாள்.

அஸ்தம் : தனவரவுகள் மேம்படும்.

சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
---------------------------------------

துலாம்

இணையம் சார்ந்த பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார ரீதியான நெருக்கடிகள் குறையும். உடல் தோற்றத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். எதிர்கால சேமிப்பு பற்றிய சிந்தனை மேம்படும். செயல்பாடுகளில் தெளிவு உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். நீண்ட நாள் கவலைகள் விலகும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

சித்திரை : லாபகரமான நாள்.

சுவாதி : மாற்றம் உண்டாகும்.

விசாகம் : இன்னல்கள் குறையும். 
---------------------------------------

விருச்சிகம்

உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். தந்தை வழியில் உதவி  கிடைக்கும். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : அனுகூலம் உண்டாகும்.

அனுஷம் : முன்னேற்றம் ஏற்படும்.

கேட்டை : மாற்றமான நாள்.
---------------------------------------

தனுசு

உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடல் ஆரோக்கிய இன்னல்கள் குறையும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்குச் சாதகமான சூழல் அமையும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். சொத்து பிரச்சனைகளில் தெளிவான முடிவு கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

பூராடம் : சாதகமான நாள்.

உத்திராடம் : முடிவு கிடைக்கும். 
---------------------------------------

மகரம்

புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. கால்நடை தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வியாபாரம் மத்திமமாக இருக்கும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். அரசு காரியத்தில் சிந்தித்துச் செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : கவனம் வேண்டும்.

திருவோணம் : அனுசரித்துச் செல்லவும்.

அவிட்டம் : சிந்தித்துச் செயல்படவும்.
---------------------------------------

கும்பம்

வாழ்க்கைத் துணைவர் வழி உறவினர்களால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கிடைக்கும். நிர்வாகப் பொறுப்புகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். நண்பர்களின் மூலம் தொழில் சார்ந்த நபர்களின் அறிமுகம் கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.

சதயம் : வாய்ப்புகள் சாதகமாகும்.

பூரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.
---------------------------------------

மீனம்

உத்தியோக பணிகளில் உயர்வு ஏற்படும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். பயணங்களால் புதுவிதமான அனுபவம் உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றமும், அனுபவ அறிவு வெளிப்படும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கால்நடைகள் விஷயத்தில் சிந்தித்துச் செயல்படுதல் நல்லது. செல்வாக்கு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : அனுகூலம் உண்டாகும்.

உத்திரட்டாதி : அனுபவம் வெளிப்படும்.

ரேவதி : சிந்தித்துச் செயல்படவும்.
---------------------------------------

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe