மாநகராட்சி கவுன்சிலர் வீட்டில் NIA சோதனை நிறைவு- எதற்காக சோதனை நடத்தப்பட்டது என கூறிய கவுன்சிலரின் கணவர்…!

published 1 year ago

மாநகராட்சி கவுன்சிலர் வீட்டில் NIA சோதனை நிறைவு- எதற்காக சோதனை நடத்தப்பட்டது என கூறிய கவுன்சிலரின் கணவர்…!

கோவை: மாநகராட்சி கவுன்சிலர் வீட்டில் NIA சோதனை நிறைவடைந்த நிலையில், எதற்காக சோதனை நடத்தப்பட்டது என கவுன்சிலரின் கணவர் தெரிவித்துள்ளார்.

கோவையில் இன்று பல்வேறு இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி 82 வது வார்டு கவுன்சிலர் முபசீரா இல்லத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. முபசீராவின் கணவர் ஆரிஃப், தியாகி குமரன் மார்க்கெட்டில் காய்கறி கடையில் பணிபுரிந்து வரும் நிலையில் அவரது கடைக்கு பக்கத்தில் கடையை வைத்திருந்த சனோஃபர் அலி என்பவர் NIA விசாரணை வளையத்திற்குள் வந்ததால் அவர் தொடர்பான ஏதேனும் விஷயங்கள் ஆரிஃப்பிற்கு தெரிந்திருக்க கூடும் என்பதன் அடிப்படையில் விசாரணை நடந்ததாக தெரிகிறது.

சுமார் 3 மணி நேரம் சோதனை நடைபெற்ற நிலையில் சோதனை முடிந்து NIA அதிகாரிகள் சென்றனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆரிஃப், காய்கறி மார்க்கெட்டில் நான் பணிபுரியும் கடைக்கு அருகில் இருப்பவரை(சனோஃபர் அலி) NIA அதிகாரிகள் கைது செய்துள்ளதால் அந்த கடைக்கு அருகில் நான் வேலை பார்த்து வருவதன் காரணத்தினால் எனக்கும் அவருக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் என்னிடம் விசாரணை நடத்தினார்கள். வீட்டில் சோதனை மேற்கொண்ட பிறகு எதுவும் இல்லை என அதிகாரிகள் கிளம்பிவிட்டனர். அரபிக் கல்லூரியில் படித்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அந்த கல்லூரிக்கு சென்றீர்களா என அதிகாரிகள் கேட்டனர் நான் போனதில்லை என்பதால் நான் அங்கு சென்றதில்லை என பதிலளித்தேன். 

கொரோனா இரண்டாவது அலையில் இருந்து சனோஃபர் அலியை எனக்கு தெரியும், மார்க்கெட்டில் பக்கத்து பக்கத்து கடை என்பதால் அவரை எனக்குத் தெரியும் என அதிகாரிகளிடம் தெரிவித்தேன். வீட்டில் சோதனை மேற்கொண்ட பின்னர் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் எதுவும் இல்லாததால் எதையும் அதிகாரிகள் எடுத்துச் செல்லவில்லை என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe