கோவையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு நாளை மறுநாள் நடக்கிறது

published 2 years ago

கோவையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு நாளை மறுநாள் நடக்கிறது

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/BAXr3lCHLQq5ShW9FLGZmG

கோவை:  தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகளை அழைத்துச் செல்லக்கூடிய பள்ளி வாகனங்கள் அதாவது பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களை ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து கோவையில் உள்ள வடக்கு, மேற்கு,  தெற்கு மற்றும் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் வைத்து பள்ளி வாகனங்கள் 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆய்வு செய்யப்பட்ட உள்ளன.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-

கோவையில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவ- மாணவிகளை அழைத்து செல்லும் பஸ்கள், வேன்கள் என மொத்தம் 1,200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. அந்த வாகனங்களில் கதவு, புட்போர்டு, ஜன்னல், டிரைவர் கேபின், அவசர வழி, முதலுதவி பெட்டி, தொடர்பு எண், பள்ளி வாகனங்களின் நிறம், குறிப்பிட்ட இடத்தில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு உள்ளதா? மாணவர்கள் ஏறும் வழி, இறங்கும் வழிகளில் உறுதியான கதவுகள், படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா?,

மேலும் வாகனங்களில் இருக்கைகள் உள்ளிட்டவை முறையாக இடம்பெற்றுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். வாகன டிரைவர்களின் லைசென்ஸ், வயது விவரம் உள்ளிட்டவை சரியாக உள்ளதா? எனவும் பரிசோதனை செய்யப்படும். இந்த கல்வி ஆண்டுக்கான பள்ளி வாகன ஆய்வு நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe