என்னது தயிர் பர்பி-யா... இப்படி ஒரு டிஷ்-அ நான் கேள்வி பட்டதே இல்லையே...!

published 1 year ago

என்னது தயிர் பர்பி-யா... இப்படி ஒரு டிஷ்-அ நான் கேள்வி பட்டதே இல்லையே...!

பேர கேட்டலே புதுசா இருக்கே-னு யோசிக்கரீங்களா… பெயர் மட்டும் புதுசு இல்லைங்க, இந்த ஸ்வீட்-ட சாப்பிட்டா நீங்க கூட புது கார் மாதிரி பளபள-னு ஆகிடுவீங்க தெரியுமா…

இந்த டிஷ்-ஓட ரெசிபி-ய தெரிஞ்சுக்கரத்துக்கு முன்னாடி இத சாப்பிட்டா ஏற்படற நன்மைகளை தெரிஞ்சுக்கலாம்-ங்க… இதன் மருத்துவ பயன்களினால் மெலிந்த குழந்தைகளின் உடல் தேறி கன்னங்கள் பூரிப்படையும். உடல் பருமன் அதிகரித்து தோல் மினுமினுப்பு அடையும். உடல் சூட்டைத் தணித்து நன்கு தூக்கம் வர உதவும்.

இவ்விளவு பயன்கள் இருக்கிற இந்த உணவின் செய்முறையைத் தெரிந்துக்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

@ புளிப்பில்லாத கட்டித்தயிர்: அரை லிட்டர்

@ சீனி: அரை கிலோ

@ நெய்யில் வறுத்து, இடித்து, பொடி செய்த ஏலம்: ஒரு சிட்டிகை

@ சாதிக்காய்: ஒரு சிட்டிகை

@ குங்குமப்பூ: ஒரு சிட்டிகை

@ நெய்: 25 மில்லி

செய்முறை:

@ ஒரு மெல்லிய துணியில் தயிரினைக் கட்டித் தொங்கவிடவும். 

@ நீர் முழுவதும் வடிந்த பின் தயிரினை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். 

@ சீனியை நீர் விட்டுக் கரைத்து வாணலியில்/ அடி கனமான பாத்திரத்தில் பாகு பதத்தில் காய்ச்சிக் கொள்ளவும்.

@ அடுப்பின் எரிச்சலை கம்மியாக வைத்து, தயிரினை பாகில் சேர்த்துக் கலந்து, கிளறிக் கொண்டே இருக்கவும்.

@ கெட்டியான பக்குவம் வரும் போது ஏலம், சாதிக்காய், குங்குமப்பூ பொடியினைத் தூவி இறக்கவும்.

@ நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிடவும். 

இப்பொது ரெடியான சுவையான, ஹெல்தி-யான தயிர் பர்பியை வேண்டிய வடிவத்தில் வெட்டி எடுத்து குழந்தைகளுக்கு பரிமாறலாம்… இதில் சுவைக்காக தேங்காய், டூட்டி ஃப்ரூட்டி, ட்ரைய் ஃப்ரூஸ் மற்றும் நிறத்திற்கேற்ப கலரையும் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். டிரை பண்ணி பாருங்க மக்களே…!

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe